தேசிய விருதுகளை இப்படி தான் செலக்ட் செய்வார்கள் - ஜூரியாக இருந்த ஆர்.வி.உதயகுமார் சொன்ன தகவல்

By subhashini · 19/8/2024

தேசிய திரைப்பட விருதுகள் குழுவில் ஜூரியாக செயல்பட்ட அனுபவம் குறித்து ஆர்.வி. உதயகுமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் வருடம் வருடம் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 70 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய படங்களுக்கான தேசிய விருது தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒவ்வொரு வருடமும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் என பல பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் அதிகமான விருதுகளை காந்தாரா படம் தான் பெற்று இருக்கிறது.

70 தேசிய திரைப்பட விருதுகள்:

தமிழில் பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் படங்களுக்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தமிழ் சினிமா கொண்டாடி வருகிறது. மேலும், இந்த விருதுகளை தேர்வு செய்யும் குழுவில் ஜூரிகளாக பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனரும், இயக்குனர் சங்கத்தின் தலைவருமான ஆர்வி உதயகுமார் ஜூரியாக செயல்பட்டு இருந்தார்.

ஆர்.வி.உதயகுமார் பேட்டி:

இந்த நிலையில் இவர் தேசிய விருது குழுவில் தேர்வு செய்த விதத்தை குறித்து தற்போது பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இது ஒரு அற்புதமான அனுபவம். தமிழ்நாட்டில் இருந்து நான் ஒருவர் தான் தேர்வு குழுவில் இருந்தேன். விருதுக்கு படங்களை தேர்வு செய்வது என்பது பொறுப்பான வேலை மட்டும் கிடையாது, விருதுக்கு என்று அனுப்பி வைத்த படங்கள் அத்தனையும் பொறுமையாக பார்க்கிற வேலை.

தேர்வு செய்த முறை:

எல்லாமே சவாலானதாக இருந்தது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் எல்லா மொழி படங்களையும் பார்க்க வேண்டி இருந்தது. ஒரு விருதுக்கு குகுறைந்தது 10 படங்களாவது வந்திருக்கும். அதில் எது பெஸ்ட் என்று பார்ப்பது தான் ரொம்ப கடினமான ஒன்று. சில மொழி படங்கள் பார்க்கும்போது எனக்கு புரியவே இல்லை. என்ன சொல்றாங்கன்னு கேட்பேன்? அதற்கு அவங்க மொழியிலிருந்து எனக்கு ஆங்கிலத்தில் விளக்கி சொல்வார்கள். நாமும் அதை ஏற்றுக் கொள்வோம். இப்படித்தான் ஒவ்வொரு படத்தையுமே கவனமாக பார்த்து ஆக வேண்டும்.

தேர்வு குழு குறித்து சொன்னது:

ஒவ்வொரு படங்களுக்கும் விவாதம் நடந்தது. எந்த காரணத்தினால் ஒரு படத்தை விரும்புகிறோம், அதில் இருக்கும் சிறப்பு என்ன? அதற்கு ஏன் விருது கொடுக்கணும்? இப்படி பல விதங்களில் விவாதம் நடந்தது. எல்லோருமே கலந்து பேசி, ஒருமனதாக முடிவு எடுத்து நேர்மையாகத் தான் இந்த விருதுகளை தேர்வு செய்திருக்கிறோம். அந்த குழுவில் இருந்தது எனக்கு ஒரு அருமையான அனுபவம் என்று நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full