என்ன நெறய பேர் விஜய் தம்பின்னு நெனச்சிட்டு இருந்தாங்க, ஒரு 30 கண்ணாடியை கொடுத்திருக்கேன் - 90ஸ் குரூப் டான்சர் வினோத்.

By Ajju · 20/12/2021

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான டான்ஸராக திகழ்பவர் மாஸ்டர் வினோத். இவர் நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் இடம் ஜூனியராக பணியாற்றியிருந்தார். அதன் மூலம் இவர் ஆரம்பத்தில் பல படங்களில் நடிகர்களுடன் கூட நின்று நடனமாடி இருந்தார். பிறகு பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் வினோத் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பது, நான் முதன் முதலில் நடனம் ஆடிய படம் வெளியே வரவில்லை. அதற்கு பிறகு பல ஏமாற்றங்கள் கஷ்டங்களை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். நான் தளபதி விஜய் உடைய தீவிர ரசிகர். அவருடைய பல படங்களில் நான் நடனம் ஆடியிருக்கிறேன். அவர் ரொம்ப நல்ல டான்ஸர். அவருடன் போட்டி போட்டு ஆட முடியாது. அந்த அளவிற்கு பயங்கரமாக நடனமாடுவார். அவருடன் சேர்ந்து படங்களில் நடனம் ஆடுவது என்று சொன்னாலே நான் பயங்கர குஷியாகி விடுவேன்.

மேலும், எனக்கு குருவாக இருந்த ராகவா லாரன்ஸும் உன்னுடைய தலைவருடைய படத்திற்கு தான் நான் நடனம் சொல்லித் தரப் போறேன் என்று சொல்லுவார். நானும் பயங்கர குஷியாகி தயாராகி முன்னாடியே போயிடுவேன். அப்படி தான் அவருடன் நல்ல பழக்கமும் ஏற்பட்டது. விஜய் சார் ரொம்ப நேர்மையான, நல்ல மனிதர். அவர மாதிரி பார்க்கவே முடியாது. யாராக இருந்தாலும் அவர் நல்லா பேசுவார்.

https://www.youtube.com/watch?v=tnfyjt3C4t0

அந்த அளவிற்கு நல்ல குணமுடையவர். நான் அவர் பக்கத்தில் நின்று ஆடும் போது கூட அவர் என்னை அவாய்ட் பண்ண மாட்டார். சரி ஆடு என்று விஜய் சார் சொல்லுவார். அப்படி இருக்கும் போது பல பேர் என்னிடம் நீ விஜய் மாதிரியே இருக்கிறாய் என்று சொல்லுவார்கள். மேலும், அவன் உன் தம்பியா என்று கேட்பார்கள் என்று விஜய் சார் என்னிடம் சொல்வார். இதையெல்லாம் கேட்டு எனக்கு ரொம்ப பெருமையாக சந்தோஷமாக இருந்தது. அதே மாதிரி ஒரு முறை விஜய், மீனா அவர்களுடைய சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலுக்கு நடனம் ஆடினோம்.

அப்போது மீனா மேடம் எனக்கும் விஜய் சாருக்கும் நடுவில் நிற்பார்கள். அப்போது நடனம் ஆடும் போது மீனா மேடம் டான்ஸ் மாஸ்டரை கூப்பிட்டு இவனை தயவு செய்து தூக்கி விடுங்கள். எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கிறது. எந்த பக்கம் விஜய் நிற்கிறார் என்று தெரியாமல் மாத்தி நிற்கிறேன் என்று சொல்வார்கள். இதெல்லாம் என்னால் இன்னும் மறக்க முடியாது என்று கூறியிருந்தார். இப்படி மாஸ்டர் வினோத் பேசின வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=8YF0jPKUGI4

அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் வேறு ஒரு யூடுயூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் 'ஒரு கட்டத்தில் நான் என்ன செய்வது என்று தெரியாமலேயே நான் வேளைக்கு போய்விட்டேன். அதே போல ஆரம்ப காலத்தில் குழந்தைக்கு பால் பவுடர் வாங்க கூட என்னிடம் காசு இல்லை என்று கூறஇருக்கிறார் . ஆனால், அதன் பின்னர் தன் கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இருக்கிறார். இவர் தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் டான்ஸ் மாஸ்டராக இருந்துஇருக்கிறார். அதே போல பல விருதுகளையும் குவித்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full