பல படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகை ரேணுகாவா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார் - வீடியோ இதோ.

By Rajkumar · 22/8/2020

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்த எத்தனையோ நடிகர் நடிகைகள் தற்போது துணை நடிகர்களாகவும் நடிகைகளாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ரேணுகாவும் ஒருவர். இவரை நீங்கள் பல்வேறு படங்களில் துணை நடிகையாக பார்த்திருக்கலாம். ஆரம்ப காலத்தில் நடிகை ரேணுகா பாலச்சந்தர் இயக்கிய சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

பாலச்சந்தர் குரூப்பில் இருந்தால் நடிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும். ஆரம்பத்தில் தனது சிறப்பான நடிப்பை சீரியல்களில் நிரூபித்த நடிகை ரேணுகா. தமிழில் 1985 ஆம் ஆண்டு பொருத்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை பல்வேறு படங்களில் நடித்த ரேணுகா தனது இரண்டாவது இன்னிங்சில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கத் தொடங்கினார்.

அதிலும் குறிப்பாக அயன் படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடித்த இவர், அலெக்ஸ் பாண்டியன், காஞ்சனா, பூஜை போன்ற பல்வேறு படங்களில் அம்மா கதாபாத்திரத்திலும் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.மேலும், பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவர் இறுதியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சத்தை கிள்ளாதே என்ற தொடரில் நடித்து வந்தார்.தற்போது சினிமாவில் இரண்டாவது இன்னிங்சில் இருந்து வரும் பல்வேறு நடிகைகள் ஆரம்ப காலத்தில் கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான்.

https://www.youtube.com/watch?v=UGOVQDzHsmI

அதற்கு நடிகை ரேணுகா மட்டும் விதிவிலக்கா என்ன ? திரைப்படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ரேணுகா சீரியல் ஒன்றில் பாவாடை கட்டிக்கொண்டு கொஞ்சம் கிளாமராக நடித்திருக்கிறார். அந்த குறிப்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகைரேணுகாவா எப்படி நடித்திருக்கிறார் என்று மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

behindtalkies AMP · Quick view
View full