நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும் கௌரி கிஷன் என்பவரும் நடித்திருந்தனர்.

சன்னி வேயின்:

Advertisement

மேலும், நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷன் மகள் கௌரி கிஷனும் என்பவரும் நடித்துள்ளார். இந்த படத்தில் ராம்-ஜானு ஜோடிதான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அதில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

Advertisement

குறிப்பாக திரிஷாவின் பள்ளி கதாபாத்திரத்தில் கௌரி கிருஷ்ணனும் நடித்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தனர். அதிலும் குறிப்பாக பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர். இப்படத்தில் இவரின் நடிப்பு பலரை கவனம் ஈர்த்ததால் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

Advertisement

இந்நிலையில், கௌரி எந்த படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்ற அதிகார்ப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கௌரி அடுத்து மலையாள சினிமாவில் கால் எடுத்து வைக்கிறார். அனுகிரஹித்தன் என்னும் இந்த படத்தில் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். 2019 ஆண்டு கோடைக்கால விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement