கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக கவுன்சிலர் சீதாபதி. இவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் ஏற்கனவே என்ன பிரச்சனைகளை இருந்துள்ளன. இது தொடர்பாக வழக்கில் நிலத்தை அளவீடு செய்யும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் அதன் பேரில் பிரச்சனை அளவீடு செய்ய வந்த நில அளவையர் மகேஸ்வரன் என்பவர் சென்றுள்ளார். நிலத்தை அளக்க வந்த மகேஸ்வரனுக்கும் சிதம்பதிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த முன்னாள் கவுன்சில் ஏதாவது போலீசார் முன்னிலையில் நிலைத்து அளவு செருப்பால் தாங்கியுள்ளார். அது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

வழக்கு விபரம்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர்  பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அதிமுக கவுன்சிலர்  சீதாபதி. இவரின் தந்தை சந்திரசேகர்  இவர் 1983 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த சின்னத்துரையிடம்  நான்கு வெத்து பத்திரத்தில் கையெழுத்து விட்டு ரூபாய் 27000க்கு கடனாக முந்திரிக்கொட்டை வாங்கி உள்ளார். மேலும் அதே ஆண்டு சின்னத்துரையின் மகள் ராஜகுமாரி என்பவர் வெத்து பத்திரத்தில் ருபாய் 90 ஆயிரம் தர வேண்டும் என்று  எழுதி கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கின் தீர்ப்புகள் ராஜகுமாரிக்கு சாதகமாக வந்தது. அதனைத் தொடர்ந்து சீதாபதியின் தந்தை சந்திரசேகர் என்பவர் தடுத்த வழக்கு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 

மேலும் சென்னை உயர்நீதிமன்றமும் ராஜகுமாரி சாதகமாகவே தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு 2006 பாகப்பிரிவினை வழக்கில் சீதாபதி கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2007 இல் இந்த இடத்தை யாரும் விற்க்க கூடாது வாங்க கூடாது என்று கடலூர் நீதிமன்றம் தீர்பளிக்கப்பட்டது. இந்த வழக்கானது தற்போது நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள நிலையில் சின்னதுரையின் மகளான ராஜகுமாரி சகோதரர்களான மணிகண்டன் நீலகண்டன் ஆகிய இருவர்களும் கடந்த மார்ச் 2021  தானே செட்டில்மெண்ட் எதிர்த்து சீதாபதி பத்திரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisement

வழக்கை விசாரித்து நீதிமன்றம் கடலூர் பத்திர பதிவுத்துறை மாவட்ட பதிவாளருக்கு விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் சர்ச்சைக்குரிய நிலத்தை அளக்க வந்த நில அளவையர் மகேஸ்வரனுக்கு எதிராக சீதாபதி குடும்ப உறுப்பினர்கள் வாக்குவாதத்தை ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இடையே வாக்கு வாதம் முற்றிய நில அளவையர் மகேஸ்வரனை சீதாபதி செருப்பால் தாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இச்ச சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement