தன் தாய் தந்தை பிரிவு குறித்து ஏ. ஆர். ரஹ்மானின் மகன் அமீன் போட்டிருக்கும் எமோஷனல் பதிவு
ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா விவாகரத்து அறிவித்திருக்கும் நிலையில் அவர்களது மகன் அமீன் போட்டிருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான், இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.
பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'யோதா' என்ற திரைப்படம் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் 'ரோஜா' படம் வெளியானதால் ரோஜா படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுடில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.
ஆஸ்கார் நாயகன்:
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு, கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்கு இசையமைப்பதற்காக இரண்டு 'ஆஸ்கார் விருதுகள்' கிடைத்தது நான் அறிந்ததே. இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து செய்திதான் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“We had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an unseen end. Even the throne of God might tremble at the weight of broken hearts. Yet, in this shattering, we seek meaning, though the pieces may not find their place again. To our friends, thank you for…
— A.R.Rahman (@arrahman) November 19, 2024
ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி அறிக்கை:
அதாவது, ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், ' திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமான முடிவுதான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நடத்திய பிறகு சமீப காலமாக எங்களுக்குள் வழியும் கவலையும் அதிகமாகின. பதற்றங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி இருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப எங்களால் முடியவில்லை. மிகக் கடுமையான மனவலியில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு:
அதைத்தொடர்ந்து, சாய்ரா பானுவின் அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில், 'நாங்கள் 30 வருடங்களை எட்டுவோம் என்று நம்பி இருந்தோம். ஆனால், எல்லா எண்ணமும் எதிர்பார்க்காத ஒரு முடிவை கொடுத்திருக்கிறது. எங்கள் இதயங்களை கண்டால் கடவுளின் சிம்மாசனமும் நடுக்கம் பெறும். நாங்கள் அர்த்தத்தை தேடுகிறோம். இருப்பினும் இந்த பிரிவில் எங்கள் பலவீனமான அத்தியாயத்தை கடந்து செல்லும்போது எங்களுக்கான தனியுரிமையை கொடுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். கடந்த 1995 ஆம் ஆண்டு ஏ ஆர் ராஹ்மானுக்கு சாய்ரா பானு என்பவருடன் திருமணம் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இவர்களுக்கு உள்ளனர்.
ஏ.ஆர். அமீன் பதிவு:
அதில் ஏற்கனவே மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த தம்பதியின் இளைய மகன் ஏ.ஆர். அமீன் தற்போது இசையமைப்பாளராகவும், பாடகர் ஆகவும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய தாய் தந்தையின் பிரிவை குறித்த தகவல் வெளியானதும், ' தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் தேவையான அந்த தனிப்பட்ட நேரத்தை கொடுக்குமாறு தாழ்மையுடன் ஒரு கோரிக்கையை அவர் வெளியிட்டு இருக்கிறார். இதிலிருந்து மீண்டு வர தங்களுக்கு இந்த தனிமை தேவைப்படுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.