அதை வைத்து தான் என்னுடைய முதல் படமாக எடுக்க நினைத்தேன், ஆனால் - ஏ.ஆர்.முருகதாஸ் ஓபன் டாக்

By subhashini · 31/12/2025

தன்னுடைய அடுத்த படம் தொடர்பான அப்டேட் பற்றி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி வருகிறார். இவர் முதன் முதலாக அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

ஏ ஆர் முருகதாஸ் குறித்த தகவல்:

இதை அடுத்து இவர் ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதற்கு பின் இவர் இந்தியில் சில படங்களை இயக்கி வந்தார்.
கடைசியாக இவர் தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஏ ஆர் முருகதாஸ் பேட்டி:

இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் தொடர்பாக ஏ.ஆர் முருகதாஸ் அளித்திருக்கும் பேட்டிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

படம் பற்றிய தகவல்:

அதில் ஏ ஆர் முருகதாஸ், என்னுடைய அடுத்த படத்தில் ஒரு குரங்கை ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறேன். இது முழுக்க கிராபிக்ஸ் திரைப்படம். நான் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்தில் இருந்தே எனக்கு இந்த யோசனை இருந்தது. இதைத்தான் என்னுடைய முதல் படமாக எடுக்கவும் நினைத்தேன். குழந்தைகளை இலக்காக வைத்து தான் இந்த படத்தை உருவாக்க இருக்கிறேன். கூடிய விரைவில் இந்த படம் தொடர்பான அப்டேட் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full