சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 'மதராஸி' படம் வெற்றி பெற்றதா? இல்லையா? முழு விமர்சனம் இதோ
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் தமிழகத்தில் நடக்கும் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு வேரறுக்கும் கதை. தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் வட இந்தியாவில் இருந்து துப்பாக்கி கலாச்சாரத்தை நடத்துகிறார்கள். அந்த வகையில் ஆறு கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை வித்யுத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீசரும் முயற்சிக்கிறார்கள். இருந்தாலும் அவர்களை மீறி துப்பாக்கிகளை சென்னைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.
சென்னையில் ஒரு தொழிற்சாலையில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருக்கிறார்கள். அதோடு காவல்துறையினுடைய அதிரடி படையிலேயே சமூக விரோதிகளுடைய ஆதரவாளர்களுமே இருக்கிறார்கள். இந்த சதி செயல்களால் அவர்களுடைய திட்டமும் நிறைவேறுகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் காதல் தோல்வியால் தற்கொலைக்கும் முயற்சி செய்கிறார். பின் அவரை வைத்து தான் இந்த துப்பாக்கிகளை அழிக்க போலீஸ் அதிகாரி முடிவெடுக்கிறார். அதற்குப்பின் அந்த தொழிற்சாலைக்கு சாதாரண தொழிலாளியாக சிவகார்த்திகேயனும் செல்கிறார்.
இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்ட உண்மை போலீசுக்கு தெரிய வருகிறது. தொழிற்சாலைக்கு செல்லும் சிவகார்த்திகேயன் வில்லன்களை கண்டுபிடித்துமே அவர்களை கொலை செய்ய தயங்குகிறார். அதற்குப் பிறகு என்ன ஆனது? பதுக்கி வைத்த துப்பாக்கிகளை சிவகார்த்திகேயன் அழித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. அதிரடி ஆக்சன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் பூந்து விளையாடிருக்கிறார் என்று சொல்லலாம்.
https://youtu.be/Gvn0_JjdCsY?si=G4lV8ED-hunWSDoO
குறிப்பாக, சண்டைக் காட்சிகளிலும் டூப் போடாமல் சிவகார்த்திகேயன் கலக்கி இருக்கிறார். காதல், ஆக்சன் என்று எல்லா காட்சிகளிலும் நடித்திருந்தாலும் நகைச்சுவைக்கு ஆட்கள் இல்லையே என்ற குறையும் சிவகார்த்திகேயன் நீக்கி இருக்கிறார். இவர் அடுத்து படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன்களாக வரும் வித்யுத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல் ஆகியோர் சிறப்பாக தங்களுடைய நடிப்பால் மிரள வைத்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தன்னுடைய இசையின் மூலம் அனிருத் ஆட்டம் போட வைத்திருக்கிறார். ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. சில காட்சிகள் யூகிக்க கூடிய அளவில் இருந்தாலும் இயக்குனர் அதை பரபரப்பாக கொண்டு சென்றிருப்பது நன்றாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிற்கு ஒரு கம்பேக் படமாக அமைந்திருக்கிறது. ஆக்சன், சோசியல் மெசேஜ் என அனைத்தும் கலந்து கலவையாக தான் படத்தை எடுத்திருக்கிறார். இன்னும் கதை கொஞ்சம் சுருக்கமாக எடுத்து இருந்தால் அட்டகாசம். மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.
நிறை:
சிவகார்த்திகேயன் நடிப்பு
கதைக்களம் அருமை
இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதமும் நன்றாக இருக்கிறது
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
சண்டை காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது
சோசியல் மெசேஜ்
குறை:
வழக்கமான கதைக்களம் தான்
சில இடங்களில் யூகிக்க கூடிய அளவிற்கு காட்சிகள் இருந்தது
படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்
மொத்தத்தில் மதராசி - சமூகத்தின் மீது அக்கறை கொண்டவன்