30வது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நினைத்தோம், ஆனால் - விவாகரத்து பற்றி ரஹ்மான் பதிவு

By krithika · 20/11/2024

தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்துச் செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏ.ஆர். ரஹ்மானின் உண்மையான பெயர் திலீப் குமார். தன்னுடைய 23வது வயதில், மதகுரு காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவிய ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறுவயதில் இருந்தே இசையில் அதிக ஆர்வம் உண்டாம்.

அதனைத் தொடர்ந்து ஏ ஆர். ரஹ்மான் தனது சிறு வயதில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வொண்டர் பலூன்' என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் நான்கு கீபோர்டுகள் வசித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான், இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசைப்பயணம்:

பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'யோதா' என்ற திரைப்படம் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் 'ரோஜா' படம் வெளியானதால் ரோஜா படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுடில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.

ஆஸ்கார் நாயகன்:

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு, கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்கு இசையமைப்பதற்காக இரண்டு 'ஆஸ்கார் விருதுகள்' கிடைத்தது நான் அறிந்ததே. இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து செய்திதான் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி அறிக்கை:

அதாவது, ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், ' திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமான முடிவுதான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நடத்திய பிறகு சமீப காலமாக எங்களுக்குள் வழியும் கவலையும் அதிகமாகின. பதற்றங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி இருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப எங்களால் முடியவில்லை. மிகக் கடுமையான மனவலியில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு:

அதைத்தொடர்ந்து, சாய்ரா பானுவின் அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில், 'நாங்கள் 30 வருடங்களை எட்டுவோம் என்று நம்பி இருந்தோம். ஆனால், எல்லா எண்ணமும் எதிர்பார்க்காத ஒரு முடிவை கொடுத்திருக்கிறது. எங்கள் இதயங்களை கண்டால் கடவுளின் சிம்மாசனமும் நடுக்கம் பெறும். நாங்கள் அர்த்தத்தை தேடுகிறோம். இருப்பினும் இந்த பிரிவில் எங்கள் பலவீனமான அத்தியாயத்தை கடந்து செல்லும்போது எங்களுக்கான தனியுரிமையை கொடுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்

behindtalkies AMP · Quick view
View full