ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் தற்போது ஒரு கதாசிரியராகவும் தயாரிப்பளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஏ ஆர் ரஹ்மான், கதை எழுதி, அவரே தயாரித்த 99 சாங்ஸ் என்ற என்ற படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த பிரெஸ் மீட்டின் போது ஏ ஆர் ரஹ்மானிடம் தமிழில் பேசிவிட்டு ஹீரோவிடம் தொகுப்பாளினி இந்தியில் பேசி வரவேற்றார். அப்போது ஏ ஆர் ‘இந்தி’ என்று கேட்டுவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று ‘நான் உங்க கிட்ட மொதெல்லே கேட்டேன் தமிழ் பேசுவீங்களானு’ என்று வேடிக்கையாக தமாஷ் செய்துவிட்டு சென்றார்.

சுஷாந்த் இறந்த சமயத்தில் இயக்குனர் ஏ ஆர் ரஹ்மான் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது , ஏன் நீங்கள் அதிக ஹிந்தி படங்களில் அதிகம் பணியாற்றுவது இல்லை என்றுகேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த ஏ ஆர் ரஹ்மான், நான் நல்ல படங்களை என்றுமே வேண்டாம் என்று சொன்னதில்லை .ஆனால், எனக்கு எதிராக ஒரு கூட்டம் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற வதந்திகளை பரப்புகிறார்கள். முகேஷ் சோப்ரா என்னிடம் வந்தபோது அவருக்கு இரண்டு நாளில் நான்கு பாடல்களை நான் கொடுத்தேன்.

Advertisement

அப்போது அவர் என்னிடம் சொன்னார், பலபேர் உங்களிடம் செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள் உங்களைப் பற்றி கதை கதையாக சொன்னார்கள் என்று கூறினார். அவர் அப்படி சொன்னதற்கு பின்னர் தான் எனக்கு புரிந்தது, நான் ஏன் குறைவான இந்தி படங்களை செய்கிறேன் என்று. அதனால்தான் எனக்கு நல்ல படத்தில் வாய்ப்பும் வருவது கிடையாது. ஏனெனில் ஒரு கூட்டமே எனக்கு எதிராக வேலை செய்து கொண்டு இருக்கிறது என்று. அவர்கள் என்ன தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று புரியாமலேயே அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னொரு கூட்டம் இவற்றிலிருந்து என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. நான் விதியை நம்புபவன் அனைத்தும் கடவுளிடம் இருந்து தான் வருகிறது என்பதை நான் நம்புகிறேன். எனவே, யார் வேண்டுமானாலும் என்னிடம் வரலாம் நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறீர்கள் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement