திருமணத்திற்கு பெண் பார்க்க இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் போட்ட 3 கண்டிஷன்- அது என்னன்னு பாருங்களே
திருமணத்திற்கு முன்பு ஏ.ஆர் ரகுமான் போட்ட கண்டிஷன் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.
பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'யோதா' என்ற திரைப்படம் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் 'ரோஜா' படம் வெளியானதால் ரோஜா படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுடில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.
ஆஸ்கார் நாயகன்:
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு, கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்கு இசையமைப்பதற்காக இரண்டு 'ஆஸ்கார் விருதுகள்' கிடைத்தது நான் அறிந்ததே. இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து செய்திதான் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி அறிக்கை:
இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமான முடிவுதான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நடத்திய பிறகு சமீப காலமாக எங்களுக்குள் வழியும் கவலையும் அதிகமாகின. பதற்றங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி இருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப எங்களால் முடியவில்லை. மிகக் கடுமையான மனவலியில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று கூறி இருந்தார்.
ஏ.ஆர். ரஹ்மானின் பிரிவு பதிவு:
அதைத்தொடர்ந்து, சாய்ரா பானுவின் அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில், 'நாங்கள் 30 வருடங்களை எட்டுவோம் என்று நம்பி இருந்தோம். ஆனால், எல்லா எண்ணமும் எதிர்பார்க்காத ஒரு முடிவை கொடுத்திருக்கிறது. இருப்பினும் இந்த பிரிவில் எங்கள் பலவீனமான அத்தியாயத்தை கடந்து செல்லும்போது எங்களுக்கான தனியுரிமையை கொடுங்கள்' என்று கூறி இருந்தார்.
தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஏ.ஆர் ரகுமானின் விவாகரத்து செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
ஏ.ஆர். ரகுமான் போட்ட கண்டிஷன்:
இப்படி இருக்கும் நிலையில் ஏ.ஆர். ரகுமான் திருமணத்திற்கு முன்பு போட்ட கண்டிஷன் குறித்த தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். அதாவது, ஏ.ஆர். ரகுமான் அவர்கள் தனக்கு வரப்போகிற பெண் எப்படியிருக்க வேண்டும் என்று மூன்று கண்டிசன்களை வைத்தார். முதலில் அந்த பெண் நன்றாக படித்திருக்க வேண்டும். அதோடு இசை அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும். இரண்டாவது அந்த பெண் அழகாக இருக்க வேண்டும். மூன்றாவது கண்டிஷன் தான் ரொம்ப முக்கியம். அந்த பெண் அனைவரையும் மதிக்கக் கூடிய மரியாதை தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று சொன்னாராம். இதையெல்லாம் தாண்டி ஏ.ஆர். ரகுமான் அவர்கள் அம்மா அலைந்து திரிந்து சாய்ராவை கண்டுபிடித்தார். இவர்களுக்கு 1995 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.