இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று, 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் நிகழ்ச்சி மும்பையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஹ்மானின் மகள் கதிஜா, ‘கடந்த 10 வருடங்களில் நீங்கள், எங்களுடன் செலவிடும் நேரம் குறைந்துள்ளதே தவிர, உங்களிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை’ என்றுகூறி இருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த தெளிவான பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்தது. விழா மேடையில் கதிஜா கண்கள் மட்டும் தெரியும் வகையில் பர்தா அணிந்திருந்தார்.

இந்த உடை மிகுந்த விவாதப் பொருளாக மாறியது. மேலும், ஏ ஆர் ரஹ்மான் மீதும் விமர்சனங்கள் எழுந்தது. ஏ ஆர் ரஹ்மான் மிகவும் பிற்போக்குவாதியாக நடந்து கொண்டுள்ளார். வெளியில் ஒரு தோற்றமும் உள்ளே வேறு மாதிரியானத் தோற்றமும் கொண்டவராக உள்ளார் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். சமீபத்தில் கூட வங்காளதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விமர்சித்திருந்தார். அதற்கு பதில் அளித்த ஏ ஆர் ரஹ்மான் மகள், இது ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த தலைப்பு மீண்டும்வந்து உள்ளது. இது நாட்டில் இவ்வளவு நடக்கிறது. ஆனால், அனைத்து மக்களும் கவலைப்படுவது ஒரு பெண் அணிய விரும்பும் உடையின் துண்டு.

Advertisement

ஒவ்வொரு முறையும் இந்த தலைப்பு என்னுள் நெருப்பை உண்டாக்குகிறது நான் கடந்த ஒரு வருடத்தில், பல ஆண்டுகளில் நான் காணாத வித்தியாசமான பதிப்பைக் கண்டேன். நான் பலவீனமாக இருக்க மாட்டேன் அல்லது வாழ்க்கையில் நான் செய்த தேர்வுகளுக்கு வருத்தப்பட மாட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன், என்னைப் போலவே என்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி. எனது பணி பேசும், கடவுள் விருப்பம் . நான் மேலும் சொல்ல விரும்பவில்லை. பெண்ணியம் என்றால் என்ன என்பதை கூகுள் செய்து பாருங்கள் என்று நெத்தியடி பதிலை கொடுத்திருந்தார்.

இதுநாள் வரை இந்த விவகாரம் குறித்து மௌனம் சாதித்து வந்த ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஏ ஆர் ரஹ்மான், ;குழந்தைகள் எங்கள் கஷ்டங்களை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் எங்கள் பிரச்னைகளை அறிவார்கள். மரபார்ந்த வழியில் வளர்த்தால்தான் நல்லது என்று நான் நினைக்கிறேன். எங்களிடமிருந்து மரபார்ந்த நல்லதையும் கெட்டதையும் பெற வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். அவ்வளவுதான். அப்புறம் அவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. ஆகவே அவள் அதைச் செய்தாள்.

Advertisement

ஆண்கள் புர்கா அணியக்கூடாது என்கிறார்கள். இல்லையெனில், நானும் அணிந்திருப்பேன். ஷாப்பிங் சென்றுவருவது, நிலையான ஒரு வாழ்க்கையைக் கண்டுபிடிப்பது ஆகியவற்றிற்கு எளிதாக இருந்திருக்கும். என்னுடைய மகள் சுதந்திரமாக இருக்கிறார் என நினைக்கிறேன். ஏனென்றால், வீட்டில் வேலை செய்பவர்களின் உறவினர்கள் யாராவது இறந்தால்கூட இறுதிச் சடங்கிற்கு அவள் சென்றுவருகிறாள். சமூகம் சார்ந்த அவளுடைய நடவடிக்கைகள் மற்றும் எளிமை ஆகியவற்றைப் பார்க்க திகைப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரஹ்மான் மகள்,

Advertisement
Advertisement