உலக அரங்கில் நல்ல வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டதற்கு காரணம் இது தான் - ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது

By subhashini · 17/4/2025

தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் கால்தடம் பதித்தார்.

தமிழில் இவர் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். இப்படி இருக்கும் நிலையில் ஏ.ஆர் ரகுமான் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு உலக அளவில் பிரபலமும் அங்கீகாரமும் கிடைப்பது சாதாரண விஷயம் கிடையாது.

ஏ ஆர் ரகுமான் குறித்த தகவல்:

ஜெய்ஹோ என்ற பாடல் மூலம் தான் எனக்கு அந்த அங்கீகாரம் கிடைத்தது. ஆஸ்கார் விருதுகளும் கிடைத்தது. இந்தியர் இல்லாத என இசையை கேட்டு வெளிநாட்டு மக்களெல்லாம் ரசித்து பாடினார்கள். அது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அப்போது எனக்கு நிறைய வாய்ப்புகளுமே கிடைத்தது. ஆனால், தொடர்ச்சியாக எனக்கு இங்கு படங்கள் இருந்தது. அதோடு எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் தான் ஹாலிவுட் வாய்ப்புகள் எல்லாம் மறுத்துவிட்டேன்.

ஏ ஆர் ரகுமான் பேட்டி:

மேலும், உலக அரங்கில் என்னை கொண்டு செல்ல இருந்த அந்த நல்ல வாய்ப்புகளை தவறவிட்டதை இப்போது நினைக்கிறேன். Slumdog Millionair படத்தினுடைய பின்னணி இசை மூன்றே வாரங்களில் முடித்தேன். பொதுவாக 130 கீஸில் பாடல் பண்ணுவேன். ஆனால், ஆஸ்கர் வென்ற படத்திற்கு 17 கீஸ் தான் பண்ணினேன். அந்த இசையைக் கேட்ட ஆஸ்கர் ஏஜெண்ட் வியந்து பாராட்டி இருந்தார். அதன் பிறகு தான் ஆஸ்கருக்கு அனுப்பினோம்.

சினிமா பற்றி சொன்னது:

ரோஜா படம் எப்படி என்னை மக்களிடம் கொண்டு சேர்த்ததோ, அதேபோலத்தான் Slumdog Millionaire பாடலும் எனக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது. மேலும், திறமையான பாடகர்களுக்கு சிறப்பாக AI இருக்க முடியாது. ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு தொழில்நுட்ப கருவியாக தான் பயன்படுத்தி வேலைகளை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யலாம். ஆனால், அதுவே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்று சொல்ல முடியாது. அதை நாம் தான் கையாள வேண்டும். அதே சமயம் ஏஐ நிறைய செலவுகளை குறைக்கிறது. பெரிய பட்ஜெட்டில் செய்யப்பட்ட பல விஷயங்களை எளிதில் ஏஐ மூலம் செய்து முடித்து விடலாம்.

AI பற்றி சொன்னது:

குறிப்பாக, சினிமா VFX குறைந்த பட்ஜெட்டில் எளிதாக செய்துவிட முடிகிறது. ஒரு அறையில் உட்கார்ந்துபடியே ஒரு முழு திரைப்படத்தையும் எடுத்துவிடும் அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு கதையை காட்சி வடிவாக உருவாக்கி சொல்லி கற்றுக் கொடுக்கலாம். சிறு சிறு பயிற்சிகள் கொடுக்கலாம். குழந்தைகளின் அறிவை அதிகப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இது ஒரு நல்ல ஐடியா என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full