பக்கத்தில் படுக்கமாட்டேன் என சொன்ன மனைவி, ரஹ்மான் செய்த தியாகம் - அவரே சொன்ன சுவாரசிய சம்பவம்.

By subhashini · 19/8/2023

பக்கத்தில் படுக்கமாட்டேன் என்று தன் மனைவி சொன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறி இருக்கும் சீக்ரெட் தான் வைரலாகி வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான்.

இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவர் மேற்கத்திய இசையை மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

ஏ.ஆர் ரகுமான் திரைப்பயணம்:

குறிப்பாக, சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர் வென்று. இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட்,கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.ரகுமான். தற்போது இவர் பல படங்களில் இசை அமைத்து வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளியான கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றிய படங்கள்:

சமீபத்தில் தான் இவர் இசையில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி மக்கள் மத்தியி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கடைசியாக இவர் உதயநிதி நடிப்பில் வந்த மாமன்னன் படத்தில் பணியாற்றி இருக்கிறார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனை அடுத்து இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார்.

ரகுமான் அளித்த பேட்டி:

இப்படி இவர் படங்களில் பிசியாக இருந்தாலும், அவ்வபோது பேட்டியும் அளித்து வருகிறார். அந்த வகையில் இவர் தன் மனைவி குறித்து சமீபத்தில் பேட்டியில் கூறியது, நான் சினிமா உலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் என்னுடைய தலை முடி நீட்டாக இருக்கும். இது என்னுடைய அடையாளமாக கூட இருந்தது. அதுமட்டுமில்லாமல் வந்தே மாதரம் ஆல்பத்தில் கூட என்னுடைய முடி நீளமாக தான் இருக்கும்.

முடி வெட்ட காரணம்:

அதை எடுத்து விட்டேன். அதற்கு காரணம் ஒன்னும் இல்லை. நீண்ட முடி வைத்திருந்தால் என் பக்கத்தில் படுக்க மாட்டேன் என்று என் பொண்டாட்டி சொல்லிவிட்டார். நாங்க தான் அப்படி வைத்திருக்கிறோம். நீ ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று கேட்டார். அதனால் எடுத்து விட்டேன் என்று வேடிக்கையாக பதில் அளித்து இருந்தார். தற்போது இந்த பேட்டி வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full