தந்தையாக எனக்கு பெருமை கிடைத்து இருக்கிறது - தன் மகள் பற்றி நெகிழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த தகவல்
தன் மகளை குறித்து பெருமையாக ஏ.ஆர்.ரகுமான் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.
பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ என்ற திரைப்படத்தில் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் ‘ரோஜா’ படம் வெளியானதால் இந்த படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.
ரகுமான் குறித்த தகவல்:
அதன் பின் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வந்தார். மேலும், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கு இசையமைப்பதற்காக இரண்டு ‘ஆஸ்கார் விருதுகள்’ ரகுமானுக்கு கிடைத்தது நாம் அறிந்ததே. அதன் பின் இவர் பல முன்னணி நடிகர்களின் படத்துக்கு இசை அமைத்து வருகிறார். இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ ஆர் ரகுமான் குடும்பம்:
இதற்கிடையில் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமீன் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் கதீஜா சினிமாவில் இசையமைப்பாளராகவும், ஏ.ஆர் அமீன் பாடகராகவும் இருக்கிறார். ஏ ஆர் ரகுமானின் உடைய இன்னொரு மகள் ரஹீமா சினிமாவுடைய தொடர்பே இல்லாமல் இருக்கிறார். இவர் ஸ்விட்சர்லாந்தில் உள்ள பிரபல கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து இருக்கிறார்.
ரகுமான் பதிவு:
தற்போது இவர் பட்டப்படிப்பு முடித்து இருக்கிறார். அதற்கான பட்டப்படிப்பு விழாவும் நடைபெற்று இருக்கிறது. மேலும், ரஹீமா தன்னுடைய முதுகலை படிப்பை முடித்து துபாயில் உள்ள சர்வதேச சமையல் கலை மையத்தில் பட்டப் படிப்பில் இளங்கலை பட்டத்தையும் முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னுடைய மகள் பட்டப்படிப்பு முடித்து பட்டம் பெறுவதை பெற்றிருப்பதை ஏ. ஆர் ரகுமான் அவர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.
மகள் பற்றி சொன்னது:
அதில் அவர், என் மகள் லிட்டில் பிரின்சஸ் ரஹீமா, Hospitality, Entrepreneurship, Innovation ஆகியவற்றில் கவனம் செலுத்தி கிளியின் உயர் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஒரு தந்தையாக பெருமைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஏ.ஆர் ரகுமானின் இந்த பதிவிற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பின் திரைப்பட இயக்குனர் பிரிட்டன் அம்புரோஸ், உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் ரகுமான். இங்கிலாந்துக்கு வாருங்கள் நாம் ஒன்றாக கொண்டாடலாம் என்றெல்லாம் வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார்.