“தம்பி உதயநிதி சொன்னது போல் சனாதனம் டெங்குவோ மலேரியாவும் இல்லை”. அதை கொடூர நோய்யுடன் விமர்சித்த ஆ. ராசா.

By Dhilip Kumar · 7/9/2023

சமீப காலமாகவே அமைச்சர் உதயநிதி பேசிய சனாதன ஒழிப்பு குறித்து பல்வேறு தரப்பு மக்களும் அவர்களது கருத்துகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்ணாமலையும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இன்று உதகையில் அது குறித்து கருத்து தெரிவித்த திமுகவின் துணை பொது செயலாளர் ஆ. ராசா சனாதனத்தை ஒரு நோயுடன் தொடர்ப்பு படுத்தி பேசியிருந்தார்.  

ஆ.ராசா நேற்றைய பேச்சு   

இவ்வளவு சமத்துவம் பேசும் இந்த கட்சிக்கு தலைவராக இருந்து இருப்பவர் சனாதனம் என்றால் என்ன தெரியுமா?  ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி சொல்வது சனாதனம். பெண்ணுக்கு உரிமை இல்லை என்று சொல்வது சனாதனம். பத்து வயதிற்குள் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது சனாதனம். பெண்களுக்கு சொத்தில் பங்கு இல்லை என்பது சனாதனம். கணவன் இறந்து விட்டால் நீயும் அந்த சிதையிலேயே செத்துப் போ என்று சொல்வது சனாதனம். இது எல்லாம் எங்களுக்கு தேவையா? இதுவெல்லாம் என்னவென்று தெரியாமல் தமிழிசை கூறுகிறார்.

வைக்கத்தில் போராட்டம் யாருக்காக நடந்தது. இந்து மதத்தில் எல்லா சாதிக்கு இங்கு இழிவு இல்லாமல் இருந்தது .இந்த பிராமினியாத்தாள். எல்லாவற்றையும்  தாண்டித்தான் வந்திருக்கிறோம் முதலில் சமாதானம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இது அனைத்தும் தான் சனாதனம். இந்த சாதனத்தை நான் ஏற்றுக் கொண்டால் பெரியாருக்கு விரோதி இந்த சனாதனத்தை நான் ஏற்றுக் கொண்டால் அண்ணாக்கு விரோதி இந்த சனாதனத்தை நான் ஏற்றுக் கொண்டால் சக மக்களுக்கு விரோதி. சாதனத்தை ஏற்றுக் கொண்டால் கலைஞருக்கு விரோதி.

நாங்கள் உழைத்த சனாதானத்தால் அந்த அமர்ந்து கொண்டு சனாதனம் சனாதனம் என்று கூறுகிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா.?  உங்களுக்கு மனசாட்சி இல்லையா நீங்கள் படித்திருக்கிறீர்களா. படித்தவனின் அறிவு சமூகத்திற்கு எதிராக போனால் அவன் மிருகத்தை விட  கொடூரமானவர் என்று சொன்னார் அம்பேத்கர். பாஜகவில் அமைச்சர் அவர்களே பிரதமர் மோடி அவர்களே உங்களுடைய அறிவு சமூகத்திற்கு எதிராக போதுமே ஆனால் அது அம்பேத்கர் சொன்னதே போல் தான் உங்களுக்கு பொருந்தும். நான் திறந்தவெளியில் கூறுகிறேன் பாஜகவில் உள்ள அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் உள்ள மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் அவர்களை விட ஆங்கிலேயர்கள் சிறப்பானவர்கள் என்று அவர் கூறி இருந்தார்.

அண்ணாமலை VS ஆ.ராசா:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில் `கோயிலில் நான் பூஜை செய்ய வேண்டும்' என எதிர்பார்க்க முடியாது, ``225-வது தலைமுறையாக சாமிக்கு பூஜை செய்து வரும் ஒருவரின் இடத்தில் நான் பூஜை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா... அது அவரின் கடமை. அவர்தான் செய்ய வேண்டும். நான் செய்யக்கூடிய விவசாயத்தை, அவரைச் செய்யச் சொல்ல முடியாது. அது என்னுடைய கடமை. நான்தான் செய்ய வேண்டும். இதுதான் சனாதன தர்மம்.தமிழகத்தில் ஒழிக்கப் பட வேண்டியது டெங்கு மலேரியா கொசு அல்ல DMK தான் என்றும் விமர்சித்து இருந்தார். இதில் எங்கு ஏற்றத்தாழ்வு இருக்கிறது. இது குறித்து ஆ. ராசா கூறுகையில் தம்பி உதயநிதி சொன்னது போல் சனாதனம் டெங்குவோ மலேரியாவும் இல்லை அது எச்.ஐ.வி நோய் என்று ஆ.ராசா கருத்து தெரிவித்துள்ளார்.     

Tamil Behind Talkies AMP · Quick view
View full