'தொடர் படப்பிடிப்பு, 102 டிகிரி காய்ச்சலிலும் நடித்திருக்கிறார்' - விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப் போனதால் அப்செட்டில் அஜித்

By krithika · 2/1/2025

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதற்கான காரணங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடா முயற்சி' படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் சிங்களான 'சவதீகா' பாடல் வெளியாகி பயங்கர ட்ரெண்டிங் ஆனது. அறிவு எழுதி இருக்கும் இப்பாடலை பாடகர் ஆண்டனிதாசன் பாடியிருந்தார். இந்தப் பாடல் வெளிநாட்டுகளில் படமாக்கப்பட்டதாகும்.

விடாமுயற்சி ரிலீஸ்:

உலகமெங்கும் நேற்று புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் எனது பார்க்கப்பட்டது. ஆனால், விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீசாகாது. அதன் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டது என்ற தகவலை லைகா நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பை கண்ட அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இது குறித்து சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

ரிலீஸ் தள்ளிப்போக காரணம்:

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போடப்பட்டதற்கான காரணங்கள் சில வெளியாகி இருக்கிறது. அதாவது ரொம்பவே இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்த படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்களாம். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வர வேண்டும் என்றால், அதே தினத்தில் வெளிநாடுகளில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு நிறைய ப்ராசஸ் இருக்கின்றதாம். வெளிநாடுகளில் ஒரு படத்தின் ரிலீஸ்க்கு முன்னரே, 15 நாட்களுக்கு முன்பே படம் சென்சார் ஆகியிருக்க வேண்டுமாம்.

கவனிக்க தவறவிட்ட தயாரிப்பு நிறுவனம்:

விடாமுயற்சி படத்தின் காட்சிகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டிருந்தாலும், சென்சாருக்கு முன்னரே பேப்பர் ஒர்க்ஸ் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளதாம். ஆனால், தயாரிப்பு தரப்பில் அதற்கு கால அவகாசம் இருக்கிறது என்ற எண்ணத்தில் அங்கே கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்கள் வருவதை கவனிக்க தவற விட்டார்களாம். வெளிநாடுகளில் தற்போது விடுமுறை என்பதால், பேப்பர் ஒர்க்ஸ் சமர்ப்பித்தலில் தாமதம் ஏற்பட்டிருக்கிறதாம். ஆனால், படத்தை இந்தியாவில் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. இங்கு மட்டும் ரிலீஸ் செய்ய முடியாது என்பதற்காக ஒட்டுமொத்த ரிலீஸையும் தற்போது தள்ளிப் போட்டிருக்கிறார்களாம்.

வருத்தத்தில் அஜித்:

மேலும், விடாமுயற்சி படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என்று முடிவானதால், நடிகர் அஜித்தும் வேறு படங்களில் பிசியாக இருந்த போதும், தனக்கு இருந்த காய்ச்சலையும் பொருட்படுத்தாமல், 'விடாமுயற்சி' க்கு கேட்ட தேதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்று முடித்துக் கொடுத்திருக்கிறார். மேலும், படம் பொங்கலுக்கு வராமல் போனதில், அஜித் பெரும் அப்சட்டில் இருக்கிறாராம். அடுத்த மாதத்திற்குள் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் தற்போது தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக இருக்கிறார்களாம். அதனால், பொங்கலுக்கு ரிலீஸ் தேதி மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full