விடியோவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்ட ஆடை பட இயக்குனர்.!

By Rajkumar · 24/6/2019

அமலா பால் நடிப்பில் 'ஆடை' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் நடிகை அமலா பால் ரத்த வெள்ளத்தில் கிழிந்த ஆடைகளுடன் இருந்ததே அதற்கு முக்கிய காரணம்.

மேலும், சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி 5 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்ட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த டீசரில் நடிகை அமலா பால் ஆடை இல்லாமல் இருப்பது தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : Bigg Boss 3 Tamil : பிக் பாஸ் தர்ஷன் நடித்துள்ள விளம்பரத்தை பார்த்துளீர்களா.! 

மேலும், இந்த படத்தை ட்ரோல் செய்து பல்வேறு விடீயோக்களும், மீம்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. மேலும் இந்த படத்தின் டீசரின் வடிவேலு வெர்ஷனை ஒன்றையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கியுள்ளனர்.அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://twitter.com/MrRathna/status/1141750111464116224

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இயக்குநர் ரத்னகுமார், இப்போதெல்லாம் ஒவ்வொரு திரைப்படைப்புக்கும் வடிவேலு வெர்ஷன் வந்துவிடுகிறது. ஆடை படமும் விதிவிலக்கல்ல. இந்த வீடியோ மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இந்த வீடியோவை பகிர்வதிலிருந்து என்னை நானே கட்டுப்படுத்த முடியவில்லை. ஆடை படம் சுதந்திரத்தை பற்றி பேச உள்ளது. நான் பேச்சுரிமையை மதிக்கிறேன். மன்னிக்கவும் அமலாபால் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full