இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பாட்னர். இந்த படத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி,பாலக் லால்வாணி, யோகிபாபு, பாண்டியராஜன், ரவி மரியா, ஜான் விஜய்,யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சபீர் அகமது ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து இருக்கிறார். ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூரியபிரகாஷ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ ஆதி ஊரில் நிறைய கடன்களை வாங்கி இருப்பதால் கடனை அடைக்க சென்னைக்கு வருகிறார். அது மட்டும் இல்லாமல் அவர் வாங்கி வைத்திருக்கும் கடனுக்கு ஒரு மாதம் தான் கெடு கொடுக்கிறார்கள். கடன் அடைக்காவிட்டால் அவர் தங்கையை கடன் கொடுத்தவர்கள் வற்புறுத்தி திருமணம் செய்து கொள்வார்கள். இதனால் கடனை அடைத்து தங்கையை மீட்க சென்னைக்கு வெறியுடன் தன்னுடைய நண்பர் யோகி பாபு உடன் ஆதி வருகிறார்.

Advertisement

இருவரும் நிறைய இடங்களில் அலைந்து திரிந்து வேலை கேட்கிறார்கள். ஆனால், வேலை கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் திருடன் ஆகி விடுகிறார்கள். அப்போது ஒரு நாள் இவர்களுக்கு சயின்டிஸ்ட் பாண்டியராஜனிடம் இருந்து ஒரு வேலை வருகிறது. மனித ஜெனிடிக்ஸ் பற்றி ஆராய்ச்சியில் பாண்டியராஜ் ஈடுபட்டிருக்கிறார். அந்த ஆராய்ச்சிக்கு முக்கியமாக ஒரு சிப் திருட வேண்டும். அதை கொண்டு வந்தால் 50 லட்சம் பணத்தை தருகிறேன் என்று பாண்டிராஜன் சொல்கிறார்.

படத்தின் கதை:

இதனால் அந்த திருட்டு வேலையை செய்ய ஹீரோ ஆதி ஒத்துக்கொள்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடக்கிறது. அதாவது யோகி பாபு அன்சிகாவாக மாறுகிறார். அதன் பின்னால் என்னெல்லாம் நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆதி இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லணும். தங்கை சென்டிமென்ட், திருட்டு, அறிவியல் ஆராய்ச்சி என படத்தில் ஒரு வித்தியாசத்தை கொண்டுவர இயக்குனர் முயற்சி இருக்கிறார்.

Advertisement

ஆனால், கதை கொண்டு சென்ற விதத்தில் தான் சொதப்பிவிட்டார் என்று சொல்லலாம். இது காமெடி சீனா? சீரியஸ் சீனா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க வசனமாகத்தான் இருக்கிறது தவிர ஒரு சுவாரசியமும் சண்டை காட்சிகளும் இல்லை. திருடச் செல்லும் இடத்தில் கூட எந்த ஒரு சீரியஸும் இல்லை. அதேபோல் நடிகர்களும் ஏதோ நடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், யோகி பாபு அன்சிகாவாக மாறி அவர் பேசும் வசனங்கள் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

Advertisement

படம் குறித்த விமர்சனம்:

அவருடைய காமெடி தான் படத்திற்கு பலத்தை கொடுத்திருக்கிறது. பின் இசை, ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு வெளியான ஒரு படத்தில் ஒரு பெண் திடீரென ஆணாக மாறிவிட்டால் என்ன நடக்கும் என்ற கதையைத்தான் பார்ட்னர் படத்தில் ரிவேர்ஸ் ஆக ஒரு ஆண் பெண்ணாக மாறிவிட்டால் என்ன என்பதை காமெடியாகக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர். முதல் பாதி தான் சலிப்பாக இருக்கிறது என்றாலும் இரண்டாம் பாதியும் விறுவிறுப்பாக செல்லவில்லை. vfx மற்றும் சிஜி மிகவும் மோசமாக இருக்கிறது. மொத்தத்தில் இயக்குனர் நிறையவே இந்த படத்திற்கு உழைத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

நிறை:

இசை, ஒளிப்பதிவு ஓகே

யோகி பாபு காமெடி நன்றாக இருக்கிறது

புது விதமான அறிவியல் ஆராய்ச்சி கான்செப்ட்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை

குறை:

நடிகர்கள் இன்னும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்

இயக்குனர் கதைக்களத்தை கொண்டு செல்லும் விதத்தில் சுவாரசியத்தையும் சஸ்பெண்ஸ் கொடுத்திருந்தால் படம் விறுவிறுப்பாக சென்றிருக்கும்

கிளைமாக்ஸில் ஒரு நேத்தி இல்லை

வி எப் எக்ஸ், சி ஜி மோசமாக இருக்கிறது

இறுதி அலசல்:

மொத்தத்தில் பாட்னர் படம் – கை கொடுக்கவில்லை

Advertisement