மக்கள் செய்தது ரொம்பவே தப்பு, உள்ளே இருப்பவர்கள் தகுதி இல்லாதவர்கள் - ஆவேசமாக ஆதிரை சொன்னது
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு ஆதிரை அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 25 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.
இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
ஆதிரை பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு அளித்த பேட்டியில் ஆதிரை, நான் வெளியே வருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. இரண்டாவது வாரம் கொஞ்சம் டவுனாக இருந்தேன். ஆனால், மூணாவது வாரம் என்னுடைய கேமை நான் நன்றாகவே தான் விளையாடினேன். நிச்சயமாக மக்களோட முடிவு தவறு என்று தான் சொல்வேன். என்னைவிட தகுதி இல்லாத நபர்கள் உள்ளே இருக்கிறார்கள். ஆனால், நான் வெளியே வந்து விட்டேன். நான் வெளிவந்தது நியாயமே கிடையாது.
வெளியேற காரணம்:
கலையரசன் நான் விளையாடிய பாதி கூட விளையாடவில்லை. ஆனால், அவரெல்லாம் உள்ளே இருக்கிறார்.
கம்ருதீனை எனக்கு இரண்டரை வருடங்களாக தெரியும். வெளியிலும் கோபம் வந்தால் இப்படித்தான் அவர் வார்த்தையை அள்ளிக் கொட்டுவார். அதே போன்று தான் வீட்டுக்குள்ளுமே அவர் செய்கிறார். நான் ஜூஸ் டாஸ்கில் ரொம்ப ரூடாக நடந்து கொண்டேன். பாட்டில் தூக்கி எறிந்தது, வினோத் அண்ணாவிடம் நடந்து கொண்டது எல்லாமே மக்களுக்கு பிடிக்காமல் போய் இருக்கலாம்.
நிகழ்ச்சி பற்றி சொன்னது:
அதனால் கூட என்னை வெளியேற்றி இருக்கலாம். ஆனால், என்னுடைய இடத்தில் இருந்து பார்த்தால் தான் நான் செய்தது சரி என்று உங்களுக்கு தெரியும். விஜய் பாரு- நடிப்பு, கம்ருதீன்- விஷம், மிக்ஸர்- கலையரசன், கனி- அன்பு பாசம், சபரி- நாட்டாமை. கண்டிப்பாக இந்த சீசனில் டாப் 5ல் எப்ஜே, கனி, சபரி, கெமி, சுபிக்ஷா வருவார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.