'தத்துவம் இல்லாத தலைவர்', விடுதலை 2 ட்ரெய்லர் மூலம் விஜய் தாக்கப்பட்டாரா? - ஆடுகளம் கிஷோர் சொன்னது

By krithika · 3/12/2024

'விடுதலை 2' படத்தின் டிரைலர் மூலம் வெற்றிமாறன், தளபதி விஜயை தாக்கியுள்ளார் என்ற செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மக்கள் அந்த வகையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் 'விடுதலை'.

இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார்.

விடுதலை படம் :

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் பாராட்டி இருந்தார்கள். விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இரண்டாம் பாகத்தைக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

விடுதலை 2 படம் :

இந்த இரண்டாம் பாகத்திலும் இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்து இருந்தது. .தற்போது இரண்டாம் பாகத்தில் தினந்தினமும் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்நிலையில் சமீபத்தில் 'விடுதலை 2' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக நடித்திருக்கிறார்.

விடுதலை 2 ட்ரெய்லர் :

மேலும், இந்த ட்ரெய்லரில் வாத்தியாரின் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மற்றும் போலீசில் சிக்கிய பின் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டு இருக்கிறது. அதோடு ' தத்துவம் இல்லாத தலைவர் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவாங்க, அது முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது' போன்ற வலுவான வசனங்கள் இடம் பெற்று இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் வரும் இந்த வலுவான வசனம் நடிகர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஆடுகளம் கிஷோர் ஒரு பேட்டியில் இது குறித்து பேசி உள்ளார்.

View this post on Instagram

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

ஆடுகளம் கிஷோர் கூறியது:

அதில். தத்துவம் இல்லாத ஆட்கள் ரசிகர்களை தான் உண்டாக்குவார்கள். நல்ல சமுதாயத்தை உருவாக்க மாட்டார்கள் என்று 'விடுதலை 2' ட்ரைலர்ல வரது, விஜய் சாருக்கு தான் வெற்றிமாறன் சார் அடியாய் வைத்திருக்கிறார் என்று கூறிவிட்டார்கள். ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. இது எல்லாமே கம்யூனிசம் தான். அது எப்படி தொடங்கியது. அவங்களுக்கு என்ன மோட்டிவேஷன் இருந்தது. ஏனென்றால், சினிமாவில் நம்ம பணம் கிடைக்கிறது என்று பண்றோம். ஆனால், அதில் எதுவுமே இல்லாமல். இன்னொருத்தருக்காக உயிர் கொடுக்க ரெடி ஆகிற என்றால், அவங்களை எதை வியக்க வைக்கிறது. என்பதை தேடி தான் அவர் போயிட்டு இருக்காரு. அது தேடும் போது தத்துவம் தானே நமக்கு பதில் கிடைக்கும் என்று விளக்கமளிதுளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full