முருகதாஸ்ன்னு சொன்னதும் 6 ஆடி ஆள்னு நெனச்சேன்,ஆனா அவர நேரில் பார்த்த போது - அமீர் கானின் வீடியோ

By Arun · 30/4/2024

நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் முருகதாஸ் குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களின் ஏ ஆர் முருகதாசும் ஒருவர். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார், தர்பார் போன்ற பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

இவர் படங்களை இயக்குவது மட்டும் இல்லாமல் தயாரித்தும் வருகிறார். மேலும், இவர் இயக்கிய படங்களில் ஒன்றுதான் கஜினி. இந்த படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதை அடுத்து இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. இந்தியில் அமீர்கான் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமீர்கான் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து இருந்தார்.

அமீர்கான் பேட்டி:

அப்போது அவர் ஏ ஆர் முருகதாஸ் குறித்துக் கூறியது, இயக்குனர் முருகதாஸ் இடம் தான் நான் ஒரு முக்கியமான குணத்தை கற்றுக் கொண்டேன். முருகதாஸ் என்ற பெயரை கேட்டதுமே அவர் ஆரடி இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் பார்ப்பதற்கு ஒரு ஸ்கூல் பையன் மாதிரி தான் இருப்பார். முதல் முறை அவரை நான் பார்த்த போது கைகளை கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு சின்ன பையன் மாதிரி தான் பேசினார்.

View this post on Instagram

A post shared by 𝑺𝒂𝒍𝒎𝒂𝒏_𝑬𝒅𝒊𝒕𝒛 (@salman_editz27)

ஏ ஆர் முருகதாஸ் குறித்து சொன்னது:

அதோடு அவரிடம் ஒரு நல்ல ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது, அவருக்கு பேசும் போது பில்டர் இல்லாமல் மனதில் இருப்பதை அப்படியே பேசிடுவார். நீங்கள் ஏதாவது ஐடியா, கதைகள் மாற்றம் சொன்னால் அவருக்கு பிடிக்காது. பிடிக்கவில்லை என்றாலும் உடனே அவர் முகம் சுழித்து, நோ சார், வெரி பேட் என்று சொல்லிடுவார். எதிரில் இருப்பவருக்கு கஷ்டமாக இருக்குமா என்பதை பற்றி எல்லாம் யோசிக்கவே மாட்டார்.

ஏ ஆர் முருகதாஸ் குணம்:

இந்த நிலையில் வேறொருவர் இருந்தால் நாம் சொல்வதை நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு இப்படி பண்ணலாமா என்று சூசகமாக பேசுவார்கள். ஆனால், முருகதாஸ் பிடிக்கவில்லை என்றால் வெரி பேட் என்று ஓப்பனாக பேசுகிறார். ஒரு ஐடியா அவருக்கு பிடித்து விட்டது என்றால் சூப்பர் சார் என்று சொல்லிடுவார். இதைத்தான் நான் முருகதாஸிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று கூறியிருந்தார்.

ஏ ஆர் முருகதாஸ் படம்:

என்னதான் முருகதாஸை பற்றி அமீர் கான் பெருமையாக பேசி இருந்தாலும் ஒரு சில நெட்டிசன்கள் உயரத்தை பற்றி யார் பேசுவது என்று அமீர் கானை கேலியும் செய்து வருகின்றனர். தற்போது ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை முருகதாஸ் இயக்குகிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் அவர்கள் அமரன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full