'இதான் வளர்ப்பு' கைகொடுக்க வந்த சிவராஜ், கையெடுத்து கும்பிட்டு காலிலும் விழுந்த ஐஸ்வர்யா ராயின் மகள்

By subhashini · 20/9/2024

விருது விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாகவே எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளை தன்னுடன் அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த siima விருது விழா நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளை அழைத்து சென்றிருந்தார். ஐஸ்வர்யா ராய் உடன் அருகில் நடிகர் விக்ரமும் அமர்ந்திருந்தார்.

பின் இருவருமே மேடைக்கு சென்று விருந்து வாங்கி வந்தார்கள். ஐஸ்வர்யா ராய் விருது வாங்கி வந்ததை பார்த்து அவருடைய மகள் ஆராத்யா சந்தோஷத்தில் துள்ளி குதித்து தன்னுடைய அம்மாவை கட்டி அணைத்து இருந்தார். மேலும், ஐஸ்வர்யா ராய் முதல் வரிசையில் தன்னுடைய மகளுடன் அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் பேச நடிகர் சிவராஜ் குமார் வந்தார். பின் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆராத்யாவே அறிமுகம் செய்து வைத்து இருந்தார்

ஐஸ்வர்யா ராய் மகள் செய்தது:

பின் அவர் பேசும்போது உடனே ஆராத்யா சிவராஜ் காலில் விழுந்து இருந்தார். உடனே அவரும் ஆசிர்வாதம் செய்திருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலருமே, எவ்வளவு உயரத்திற்கு போனாலும் கலாச்சாரத்தை மறக்காமல் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளை எப்படி வளர்த்திருக்கிறார் என்று கமெண்ட் போட்டு ஐஸ்வர்யா ராயின் மகள் செய்த செயலை பாராட்டி வருகிறார்கள்.

https://youtube.com/shorts/n6RsVsaNyDU?si=ahYJ7ujpQzNM318C

ஐஸ்வர்யா ராய் திரைப்பயணம்:

எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய் தான். இவருடைய கண் அழகும், நடிப்பிற்கும் இன்னும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் குறித்த தகவல்:

மேலும், இவர் 22 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னனி நடிகையாக நிலைத்து இருந்தவர். இவர் தமிழ், பெங்காலி, ஆங்கிலம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி ரோலில் மிரட்டி இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து:

இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான பெண் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். ஆனால், சமீப காலமாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் உலவி வருகிறது. இது குறித்து இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full