இதை செய்து இருந்தால் நான் உயர்வான வாழ்க்கை வாழ்ந்து இருப்பேன் - ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை
நடிகர் ரவி மோகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்த்தி வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் ஆர்த்தி-ரவி மோகன் சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. அதோடு ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.
இப்படி இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. அதன் பின் ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தான் நடிகர் ரவி அவர்கள் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து நடிகர் ரவி மோகன், ஆர்த்தி எப்போதும் எனக்கு முன்னாள் மனைவி தான்.
ரவிமோகன்-ஆர்த்தி சர்ச்சை:
அதில் எந்த மாற்றமும் இல்லை. என் குழந்தைகளை நான் கவனிக்கவில்லை என்று சொல்வது முற்றிலுமே தவறு. என் குழந்தைகளை நெருங்க கூட விடுவதில்லை. என் பொறுமைக்கும் எல்லை உண்டு. கெனிஷாவை பற்றி தேவையில்லாமல் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். அவர் என் உயிரை காக்க வந்த தோழி என்றெல்லாம் கூறியிருந்தார். இப்படி இவர் பேசியதை அடுத்து ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இப்படி மாற்றி மாற்றி இருவர் தரப்பிலும் வாக்குவாதம் அதிகமாகி கொண்டு இருக்கிறது.
ஆர்த்தி அறிக்கை:
இப்படி இருக்கும் நிலையில் ரவி மோகனின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்த்தி மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், 15 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காக என்னுடைய சொந்த கனவுகள், லண்டனில் நான் பெற்ற முதுகலை பட்டம், இலட்சியம் என அனைத்தையும் திறந்து விட்டு தான் வாழ்ந்தேன். வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பதாக உறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதியும் மீறப்பட்டது. அவருக்காக வாழாமல் எனக்காகவும் என்னுடைய லட்சியங்களுக்காகவும் நான் வாழ்ந்திருந்தால் என்னுடைய சொந்த அடையாளத்தில் இதைவிட இரண்டு மடங்கு வசதியான, ஒரு உயர்வான வாழ்க்கையை நான் வாழ்ந்து இருப்பேன். ஆனால், காதல் என்ற பெயரில்,நம்பிக்கை என்ற பெயரில் வாழ்ந்து விட்டேன்.
ரவி பற்றி சொன்னது:
நாங்கள் இதுவரை எடுத்த அனைத்து பொருளாதார முடிவுகளும் இருவரும் சேர்ந்து எடுத்தவை தான். எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. அவை முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். இந்த இக்கட்டான சூழலில் என்னுடன் துணை நிற்கும் செய்தி துறை சமூக ஊடகம், பொதுமக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு உண்மையில் எனக்கு ரொம்ப அதிகமான பலத்தை கொடுத்திருக்கிறது. இத்தனை நெருக்கடியையும் தாங்கிக் கொண்டிருக்கும் என்னுடைய இரண்டு பிள்ளைகள், எங்கள் வீட்டு பெரியவர்கள், என் நண்பர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய இந்த தனிப்பட்ட பிரச்சனையை இப்படி நான் பொதுவெளியில் இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவும்.
மீடியாவில் பேச காரணம்:
இந்த சூழ்நிலையில் என் சுய கௌரவத்தை பாதுகாக்கவே இப்படி முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இத்தனை வருடங்கள் உங்களுக்காக உங்களோடு வாழ்ந்த ஒருத்தியை உதறித் தள்ள வேண்டும் என முடிவெடுத்த நீங்கள் அதை கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டிருக்கலாம். இன்று என் கண்ணியமும் நேர்மையும் உங்களால் ஒரு பொது விவாதமாக மாற்றப்பட்டு இருப்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. உண்மை தெரிந்த நபர் என் கணவர். அவர் எனக்காக நின்று பேசவே இல்லை. அவருடைய மௌனத்திற்கு பின் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. அவருக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்று உண்மையிலேயே நான் விரும்புகிறேன். ஆனால், அந்த நிம்மதி உங்களோடு எல்லா கடினமான நேரத்திலும் துணை நின்ற ஒருவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் கிடைக்காது. நான் பலவீனமானவள் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டுள்ள அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன். ஒருபோதும் தாழ்ந்து போக மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.