சினிமால நீ என்ன கிழிக்க போறேன்னு கேட்டவன் இன்னிக்கி - படத்தின் வெற்றிவிழா மேடையில் பேசிய அபர்ணதி

By Arun · 13/10/2023

சினிமாவிற்கு சென்றது குறித்து தன்னை விமர்சித்தவருக்கு நடிகை அபர்ணதி கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அபர்ணதி. இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். பின் கடந்த 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை ‘ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருந்தது.

இது நடிகர் ஆர்யாவிற்கு பெண் பெரும் நிகழ்ச்சியாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பல இளம் பெண்கள் பங்குபெற்று இருந்தார்கள். அதில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் அபர்ணதி தான். இவர் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சக போட்டியாளர்கள் அனைவரிடமும் வாயாடி என்று பெயர் பெற்று இருந்தார். அனைவரிடமும் ஆர்யா மீது கொண்ட அன்பால் தனது பெயருக்கு பின்னால் ஆர்யா என்ற பெயரை கூட சமூக வலைதளத்தில் நீக்காமல் இருந்தார் அபர்னதி.

அபர்ணதி திரைப்பயணம்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ஆனால், இவர் ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று போராடினார். ஆர்யா அபர்னதியை திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின்னர் மற்ற போட்டியாளர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அபர்ணதிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

ஜெயில் படம்:

அந்த வகையில் இவர் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயில் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்து இருந்தார். குறிப்பாக ஜெயில் படத்தில் நடிகை அபர்னதி ஜி வி பிரகாஷுடன் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்து இருந்தது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த படத்தில் அபர்ணதியின் நடிப்பு பாராட்டைப் பெற்றிருந்தது.

இறுக்கப்பற்று படத்தின் வெற்றி விழா:

இதனை அடுத்து தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் இறுக்கப்பற்று. இந்த படத்தை இயக்குனர் யுவராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா, அபர்ணதி, விதார்த், ஸ்ரீ, சானியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இறுக்கப்பற்று படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=tArb8GpHZyw

அபர்ணதி கொடுத்த பதிலடி:

இதில் கலந்துகொண்ட அபர்ணதி, என்னுடைய அப்பாவின் நண்பரின் மகன் ஒருவர் என்னை பார்த்து, நீ சினிமாவுக்கு போய் என்னத்த கிழிக்க போற? என்று கேட்டார். அப்போது நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். ஆனால், இன்று அவர் துபாயில் நான் நடித்த படத்தின் டிக்கெட்டை கிழித்து படம் பார்த்து இருக்கிறார். இதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full