திரில்லர் பாணியில் வெளிவந்த அபர்னிதியின் 'வெஞ்சன்ஸ்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By ·

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அபர்னிதி. ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது இவர் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் ஒரு வெளியாகியிருக்கும் படம் வெஞ்சென்ஸ். இந்த படத்தை ராகுல் அசோக் இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோயினி அபர்னிதி சின்ன வயதில் இருந்தே ஒரு வித தாழ்வு மனப்பான்மையில் இருக்கிறார். தன்னை யாரும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் என்று பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். சில நாட்களிலேயே இவர் மீதான கவனம் கலைகிறது. இதனால் இவர் நன்றாக படித்து உயர் பதவி பெற்று எல்லோருடைய கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இதனால் இவர் கஷ்டப்பட்டு படித்து கலெக்டர் ஆகிறார். பேரும் புகழுடன் அபர்னிதி இருக்கிறார்.
யாருக்கும் பயப்படாமல் இவர் எடுக்கும் சில முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் கதி கலங்க வைக்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் இவருக்கு வேலையுமே போகும் நிலைமை வருகிறது. ஆனால், இவருடைய திறமையை கண்டு ஒரு முக்கிய பொறுப்பு இவருக்கு அரசாங்கத்திலிருந்து கொடுக்கிறார்கள்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது? அபர்னிதி ஆட்டம் சூடு பிடித்ததா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் கதாநாயகி அபர்னிதி ஒன் மேன் ஆர்மி போல படத்தை சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். மிடுக்கான தோற்றம், அதிரடி முடிவு, ஆக்சன் என அனைத்திலுமே தன்னுடைய நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். புகழும் பேரும் உடன் வாழ வேண்டும் என்று அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம்
சிறப்பாக இருக்கிறது.

இவரை அடுத்து வரும் ஜான் விஜய், இளவரசி, லிவிங்ஸ்டன் உடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. ஒரு நல்ல பொலிட்டிக்கல் டிராமாவை தான் இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.
கதைக்களம், நடிகர்கள் தேர்வு என இயக்குனர் அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்தி இருக்கிறார். இருந்தாலும் கதையை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.

முதல் பாதியின் அளவுக்கு இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக இல்லை. நிறைய லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது. படத்தில் பெரிதாக ட்விஸ்ட்கள் இல்லை. டெக்னிக்கலாக படம் ஓகே இருந்தாலும் கதையை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:

அபர்னிதி நடிப்பு

கதைக்களம் ஓகே

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

குறை:

நிறைய லாஜிக் குறைபாடுகள்

சுவாரசியம் குறைவு

இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில் வெஞ்சென்ஸ் - விறுவிறுப்பு குறைவு

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை