11 வருஷம் கழித்து நான் மீண்டும் சினிமாவில் நடிக்க காரணம் இது தான் - நடிகர் அப்பாஸ் ஓபன் டாக்

By subhashini · 17/3/2026

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் பல நடிகர்கள் இருந்தார்கள். பிரசாந்த் துவங்கி மாதவன் வரை பல்வேறு நடிகர்கள் சாக்லேட் பாய் என்ற பட்டத்துடன் கொடிகட்டி பறந்தவர்கள். அந்த வகையில் நடிகர் அப்பாஸும் ஒருவர். தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் 1996 ஆம் ஆண்டு காதல் தேசம்’என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனார்.

முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. மேலும், இவர் சிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார். பின் இவர் தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார். அப்போது தான் இவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது. முதல் படத்தின் வெற்றி தொடர்ந்து, விஜய் மற்றும் அஜித்துக்கு போட்டியாக இவர் வருவார் என பலர் கனவு கண்டார்கள். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார்.

அப்பாஸ் திரைப்பயணம்:

இதனிடையே இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. அதன் பின்னரும் அப்பாஸ் சினிமா, டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். இறுதியாக இவர் 2011 ஆம் ஆண்டு ‘கோ’ படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றி இருந்தார். அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. ஒரு கட்டத்தில் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் சினிமாவே வேண்டாம் என்று வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

அப்பாஸ் கம்பேக்:

தற்போது 12 வருடங்களுக்கு பிறகு நடிகர் அப்பாஸ் மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஹேப்பி ராஜ் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், கௌரி பிரியா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பியான்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

View this post on Instagram

A post shared by Thanthi TV (@thanthitv)

அப்பாஸ் பேட்டி:

இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் அப்பாஸ், 11 வருடம் கழித்து நான் ஹேப்பி ராஜ் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறேன். இதற்கு காரணம், இந்த படம் ஒரு நல்ல ஃபேமிலி என்டர்டைனர் படம். இப்ப இருக்க சூழலில் எல்லாத்திலும் நெகட்டிவிட்டியாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த படத்தோட கதையை கேட்ட உடனே எனக்கு பாசிட்டிவாக தோன்றியது. அதனால் தான் நடிக்க ஒத்துக் கொண்டேன். இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக சிரித்து விட்டு வெளியே போவார்கள். கண்டிப்பாக இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full