அப்பாஸ் படத்தை பார்த்து விட்டு உன்ன மாதிரியே இவர் இருக்கார்னு அப்பாஸுக்கே அனுப்பியுள்ள NZ நண்பர்.

By Rajkumar · 13/3/2021

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல நடிகர்கள் இருந்துள்ளனர். பிரசாந்த் துவங்கி மாதவன் வரை பல்வேறு நடிகர்கள் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் இருந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகர் அப்பாஸும் ஒருவர். தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு 'காதல் தேசம்'என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து.சிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார் அப்பாஸ். தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார் அப்பாஸ். அப்போது தான் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் மற்றும் அஜித்துக்கு போட்டியாக இவர் வருவார் என பலர் கனவு கண்டார்கள். அதன்பின்னர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்தார் அப்பாஸ்.இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் சினிமா, டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.

இறுதியாக இவர் 2011 ஆம் ஆண்டு 'கோ' படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றி இருந்தார். அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அப்பாஸ் சினிமாவில் இருந்து விலகியது குறித்தும், இந்தியாவை விட்டு வந்தது குறித்தும் கூறியுள்ளார். அதில், இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஒரு சினிமா கலைஞருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால், அதன் பின்னணியில் உள்ள காரணத்தை அவர்கள் காணவில்லை. ஆனால் நியூசிலாந்தில், அப்படியான விஷயங்கள் கிடையாது.

https://twitter.com/peru_vaikkala/status/1354300046901211139

நியூசிலாந்திற்கு வந்த பிறகு நான் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்தேன், நான் ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்தேன், அதை நான் ரசித்தேன். கட்டுமானத் துறையிலும் பணியாற்றினேன் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் அப்பாஸ் நடித்த படத்தை பார்த்துவிட்டு நீயூசிலாந்தில் அப்பாஸுடன் வேலை பார்க்கும் நபர் ஒருவர், உங்களை போலவே இவர் இருக்கிறார் என்று அபாஸிடமே கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள அப்பாஸ்,

behindtalkies AMP · Quick view
View full