மணிரத்னம் இயக்கிய அந்த படத்தின் ஆலோசகர் என் மகன் தான்.! அபிநந்தன் தந்தை பேட்டி.!

By Rajkumar · 28/2/2019

தற்போது சமூக வலைத்தளம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருவது இந்திய பைலட் அபிநந்தன் என்பவர் தான். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது அந்த தாக்குதலில் 400 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று காலை பாகிஸ்தானை சேர்ந்த சில போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவ பார்த்தது அதனை இந்திய இராணுவ வீரர்கள் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், பிடிபட்ட 2 விமானிகளில் ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில் அபிநந்தன் என்ற இந்திய வீரர் பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்துள்ளது

இந்த நிலையில் அவரைப் பற்றிய மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தில் அபிநந்தன் ஆலோசகராக பணியாற்றி உள்ளார். இந்த தகவலை அபிநந்தன் இன் தந்தை வரதன் கூறியுள்ளார் காற்று வெளியிடை படம் முழுக்க முழுக்க ஒரு விமான வீரரின் கதையாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Tamil Behind Talkies AMP · Quick view
View full