அபிஷன் நடிப்பில் காதல் கலாட்டாவாக வந்த 'வித் லவ்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வித் லவ். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மதன் என்பவர் இயக்கி இருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ அபிஷன் தன்னுடைய அம்மாவை இழந்த மனவேதனையில் இருக்கிறார். அதோடு இவர்
விருப்பம் இல்லாமல் தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். அவருடைய வாழ்க்கை சரியாக அமைய வேண்டும் என்று அவருடைய அக்கா ஆர் ஜே ஆனந்தி திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். பின் மேட்ரிமோனி வழியாக ஒரு பெண்ணை அவருடைய அக்கா தேர்வு செய்கிறார். அவரை சந்திக்க தான் அபிஷன் போகிறார்.
அந்த சந்திப்பில் தான் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறுகிறது. அவர் பார்க்க சென்றபின் ஹீரோயின் அனஸ்வரா தான். கொஞ்ச நேரத்திலேயே இருவரும் பள்ளி கால நண்பர்கள் என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். அதற்குப் பிறகு கதை பள்ளி நாட்களுக்கு செல்கிறது. ஹீரோ வேறொரு பெண்ணையும், ஹீரோயின் வேறொரு ஆணையும் காதலிக்கிறார்கள். பின் தங்களுடைய பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுடைய பழைய காதலர்களை பார்த்தால் என்னவாக இருக்கும்? என்று இருவரும் அவர்களை நோக்கி செல்கிறார்கள்.
அப்போது நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தினுடைய மீதி கதை. கதையின் ஆரம்பமே ரொம்ப இயல்பாகவும் எளிமையாகவும் தொடங்குகிறது. அதற்கு பிறகு இரண்டாம் பாதியில் கொடுத்திருக்கும் ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது. முதல் பாதியில் தான் சில வசனங்கள் செயற்கை தனமாக இருக்கிறது.
ஹீரோ அபிஷனுக்கு இது முதல் படமாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருப்பது பெரிய பாராட்டுக்கூடிய விஷயம்.
அனஸ்வராவிற்கும் இதுதான் தமிழில் முதல் படம். இருந்தாலும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களின் வேலையை முடித்து இருக்கிறார்கள். முதல் பாதி பொறுமையாக இருந்தாலும் இரண்டாம் பாதியை இயக்குனர் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கொடுத்திருப்பது பாராட்டுக்கூடிய விஷயம். எடிட்டிங், பின்னணி இசை எல்லாமே படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.
அபிஷன் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தது. அதேபோல் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம் நன்றாக வந்திருக்கிறது. முதல் படத்திலேயே அபிஷன் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இயக்குனராக ஹிட் கொடுத்து நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் வரிசையில் அபிஷனும் இடம்பிடிப்பார். இந்த படம் எல்லோர் வயதினரும் சென்று பார்க்கும் ஒரு ஜாலியான படமாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த ஆண்டின் ஒரு பீல் குட் படமாக வித் லவ் இருக்கிறது.
நிறை :
அபிஷன், அனஸ்வரா நடிப்பு சிறப்பு
கதைக்களம் அருமை
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது.
குறை:
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்