என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லமுடியாது - விவாகரத்து பற்றி அபிஷேக் பச்சன் சொன்னது
விவாகரத்து குறித்த சர்ச்சைகளுக்கு அபிஷேக் பச்சன் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் இன்னும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர்.
இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேலும், இவர் 22 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னனி நடிகையாக நிலைத்து இருந்தவர். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
ஐஸ்வர்யா ராய் குறித்த தகவல்:
திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான பெண் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் உலவி வந்தது.
ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் விவகாரம்:
அதன் பின் இருவருமே ஜோடியாக இருந்த புகைப்படம் வந்தவுடன் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதற்குப் பின் இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று இருந்தார்கள். ஆனால், ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் தனியாக வந்திருந்தார். இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சன் தன்னுடைய அப்பா, அம்மா சகோதரி உடன் தனியாக வந்திருந்தார். இருவருமே தனித்தனியாகத் தான் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
அபிஷேக் பச்சன் பேட்டி:
இதனால் தான் மீண்டும் இவர்களின் விவாகரத்து சர்ச்சை புகைய ஆரம்பித்தது. அதுமட்டுமில்லாமல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். கூடிய விரைவிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அபிஷேக் பச்சன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக பிரிந்து வருவதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் அபிஷேக் பச்சன், என்னை பற்றி நிறைய வதந்திகள், நெகட்டிவ் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றது.
சர்ச்சைகளுக்கு கொடுத்த விளக்கம்:
இதில் எல்லாம் நான் கவனம் செலுத்தினால் அது என்னையே மூழ்கடித்து விடும். ஒருவன் தன்னுடைய கடினமான சூழலில் நம்பிக்கையை விடாமல் பிடித்திருக்க வேண்டும், இல்லை என்றால் அது நம்மையே ஆட்டிப்படைத்து விடும். விடாமுயற்சி என்ற ஒரு சொல் இருக்கிறது. அதை அப்படியே வைத்துக்கொண்டு நம்முடைய அடிப்படையை மாற்றாமல் இருக்க வேண்டும். நம் விமர்சனங்களுக்கு பயந்து ஏதாவது செய்ய நினைத்தால் அது நம் செயல்களாலயே நாம் கைவிடப்படுவோம். கெட்டது தன்னைத்தானே விடாமல் பிடித்துக் கொள்ளும்போது நல்ல விஷயங்கள் மட்டும் நாம் ஏன் கைவிட வேண்டும்? நான் நேர்மையானவன். அதை யாராலும் மாற்ற முடியாது. நான் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு காது கொடுத்து கேட்க விரும்பவில்லை. நான் காற்றில் அசையும் இலையாக இருக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.