அவளுக்கு நன்றி சொல்லனும், காரணம் - ஐஸ்வர்யா ராய் குறித்து அபிஷேக் பச்சனின் உருக்கம்
ஐஸ்வர்யா ராய் குறித்து மனம் திறந்து நடிகர் அபிஷேக் பச்சன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து எப்போதும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் இன்னும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேலும், இவர் 22 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னனி நடிகையாக நிலைத்து இருந்தவர். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
ஐஸ்வர்யா ராய் குறித்த தகவல்:
இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான பெண் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார் என்று சொல்லலாம். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் உலவி வந்தது.
ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் விவகாரம்:
அதன் பின் இருவருமே ஜோடியாக இருந்த புகைப்படம் வந்தவுடன் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதற்குப் பின் இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று இருந்தார்கள். ஆனால், ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் தனியாக வந்திருந்தார். இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சன் தன்னுடைய அப்பா, அம்மா சகோதரி உடன் தனியாக வந்திருந்தார். இருவருமே தனித்தனியாகத் தான் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
அபிஷேக் பச்சன் பேட்டி:
இதனால் தான் மீண்டும் இவர்களின் விவாகரத்து சர்ச்சை புகைய ஆரம்பித்தது. அதுமட்டுமில்லாமல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். கூடிய விரைவிலேயே இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அபிஷேக் பச்சன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் இதனால் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக பிரிந்து வருவதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அமிதாப் பச்சன், நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. காரணம் என்னுடைய மனைவி ஐஸ்வர்யா ராய் என்னுடைய மகளை ரொம்ப கவனமாக பார்த்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராய் குறித்து சொன்னது:
அவர் பொறுப்பான, தியாகமான தாயாக இருப்பதை நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் என் குழந்தையை
கவனமாக பார்த்துக் கொள்வதால் தான் என்னால் படத்தில் தைரியமாக நடிக்க முடிகிறது. அதேபோல் நான் பிறந்த போது என்னுடைய அம்மா என்னை கவனித்துக் கொள்ள சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அதனால்தான் என்னுடைய அப்பா நிம்மதியாக வேலை செய்தார். என்னுடைய அப்பா பாசத்திற்கு ஏங்கக்கூடாது என்பதற்காகவே என்னுடைய அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு பார்த்துக்கொண்டார். தன்னுடைய பிள்ளைகளுக்காக அம்மா செய்யும் தியாகத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கூறி இருந்தார். இதன் இவர்கள் இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் விவாகரத்தும் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.