உலக அழகி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்கிறாரா? சர்ச்சைகளுக்கு அபிஷேக் பச்சன் கொடுத்த பதில்

By subhashini · 19/7/2024

ஐஸ்வர்யா ராய் உடனான விவாகரத்து குறித்து அபிஷேக் பச்சன் கொடுத்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் இன்னும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர்.

இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேலும், இவர் 22 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னனி நடிகையாக நிலைத்து இருந்தவர். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யா ராய் குறித்த தகவல்:

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான பெண் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் நந்தினியாக நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் உலவி வந்தது.

ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் விவகாரம்:

அதன் பின் இருவருமே ஜோடியாக இருந்த புகைப்படம் வந்தவுடன் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதற்குப் பின் இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று இருந்தார்கள். ஆனால், ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் சேர்ந்து தனியாக வந்திருந்தார். இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சன் தன்னுடைய அப்பா, அம்மா சகோதரி உடன் தனியாக வந்திருந்தார். இருவருமே தனித்தனியாகத் தான் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

நெட்டிசன் பதிவு:

இதனால் தான் மீண்டும் இவர்களின் விவாகரத்து சர்ச்சை புகைய ஆரம்பித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். கூடிய விரைவிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில், விவாகரத்து யாருக்கும் எளிதானது கிடையாது. கடைசிவரை சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் எல்லோருடைய கனவாக இருக்கும்.

அபிஷேக் பச்சன் பதில்:

வயதான தம்பதிகள் கையைப் பிடித்துக் கொண்டு சாலையை கடக்கும் வீடியோக்களை பார்க்கும்போது நாமும் அதே போல் இருக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும். ஆனால், சில நேரம் வாழ்க்கையில் நாம் விரும்புவது நடக்காது. பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து விட்டு பிரிவதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? என்று போடப்பட்டிருந்தது. இந்த பதிவிற்கு தான் அமிதாப்பச்சன் லைக் செய்து இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் நிஜமாகவே நீங்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருக்கிறீர்களா? அதைத்தான் மறைமுகமாக சொல்கிறீர்களா? ஐஸ்வர்யா ராயும் நீங்களும் பிரியப்போகிறீர்களா? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full