நெகடிவ் கமெண்ட்ஸ் பற்றி ஐஸ்வர்யா ராய் சொன்ன அட்வைஸ் - நடிகர் அபிஷேக் பச்சன் ஓபன் டாக்
தங்களை பற்றிய விமர்சனங்களுக்கு நடிகர் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து எப்போதும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய். ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் தமிழில் பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
அபிஷேக் பச்சனும் பாலிவுட்டில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான பெண் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார் என்று சொல்லலாம். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் உலவி வந்தது.
ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் குறித்த தகவல்:
அதன் பின் இருவருமே ஜோடியாக இருந்த புகைப்படம் வந்தவுடன் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதற்குப் பின் இவர்கள் இருவரும் அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று இருந்தார்கள். ஆனால், ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் தனியாக வந்திருந்தார். இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சன் தன்னுடைய அப்பா, அம்மா சகோதரி உடன் தனியாக வந்திருந்தார். இருவருமே தனித்தனியாகத் தான் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இதனால் மீண்டும் இவர்களின் விவாகரத்து சர்ச்சை புகைய ஆரம்பித்தது. அதுமட்டுமில்லாமல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் விவகாரம்:
கூடிய விரைவிலேயே இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அபிஷேக் பச்சன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அபிஷேக் பச்சன் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்கான அளித்த பேட்டியில்,
எல்லோரையும் போல நானுமே நிறைய எதிர்மறை விமர்சனங்களுக்கு அதிக கவனம் செலுத்தி இருந்தேன்.
எல்லோரையும் சந்தோஷப்படுத்த, திருப்திபடுத்த வேண்டும் என்று விரும்பினேன். எல்லா எதிர்மறை விமர்சனங்களுக்கும் கூடுதல் கவனம் செலுத்தினேன்.
அபிஷேக் பேட்டி:
அப்போதுதான் என்னுடைய மனைவி ஐஸ்வர்யா, நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு வாத்து போல. நீந்தி செல்லும் போது அதன் முதுகு பக்கம் இருக்கும் தண்ணீர் தான் நெகட்டிவ் விமர்சனம். நீங்கள் ஏன் நெகட்டிவ் விஷயங்களில் கவனம் செலுத்துகிறீர்கள்? பாசிட்டிவான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று சொன்னார். சில சமயங்களில் மற்றவர்களை மகிழ்விக்க முயற்சிப்பது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால், அதுதான் மகிழ்ச்சி. மகிழ்ச்சியை தொலைக்கும் லட்சியவாதியாக இருக்காதீர்கள். அதேநேரம் என்னால் எல்லோரையும் சந்தோஷப்படுத்த முடியாது என்பதையும் புரிந்து கொண்டேன்.
https://www.youtube.com/watch?v=NnXJa4DBaw0
விவாகரத்து சர்ச்சைக்கு பதிலடி:
சமீபத்தில் கூட எனக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் இடையே விவாகரத்து நடக்கப் போவதாக செய்திகளை கேட்டேன். அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நீங்கள் என் வாழ்க்கையை வாழவில்லை. இதையெல்லாம் படிப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியாது. உங்களுக்கென்று ஒரு குடும்பம் இருக்கும்போது உங்களைப் பற்றி இது போன்ற செய்திகள் வரும்போது உங்களை எப்படி பாதிக்கும்? எவ்வளவு வலிமையாக இருந்தாலுமே இந்த மாதிரி வார்த்தைகள் சொல்லும் போது வலிக்கத்தான் செய்யும். நெகட்டிவ்வான செய்திகள் வியாபாரம் ஆகிறது என்பதால் தவறான முறையில் அதை பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.