தாலி கழட்டி வச்சிட்டு நடிக்க மாட்டேன் - சன் டிவி சீரியல் நடிகையின் அதிரடி பதில்.

By Arun · 22/10/2022

எந்த ஒரு சூழ்நிலையிலும் தாலி கழட்டி வைத்துவிட்டு நடிக்க மாட்டேன் என்று சன் டிவி சீரியல் நடிகை வித்யா மோகன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் வித்யா வினு மோகன். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞர், வடிவழகியும் ஆவார். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரை படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழில் இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த தண்டாயுதபாணி என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், கன்னடம் என பழமொழி படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவருக்கு என்று ஒரு அங்கீகாரம் சினிமாவில் கிடைக்கவில்லை. பின் பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை. இதனால் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். இதனை தொடர்ந்து இவர் 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி என்ற தொடரில் நடித்திருந்தார்.

வித்யா குறித்த தகவல்:

இந்த தொடரின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம். இந்த தொடரில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வித்யா நடிக்கும் சீரியல்:

அது மட்டும் இல்லாமல் டிஆர்பி யிலும் இந்த சீரியல் முன்னிலையில் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பத்து ஆண்டுகளுக்கு மேலாக சின்ன திரையில் நடித்து வருகிறார் வித்யா. இதற்கிடையே இவர் வினு மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு நடிகர் தான். வித்யா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோ என்று எதையாவது சோசியல் மீடியாவில் பகிர்ந்து விடுவார்.

வித்யா அளித்த பேட்டி:

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். சமீபத்தில் கூட இவர் தன் கணவருடன் வெளியே சென்று இருந்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் தாலி குறித்து நடிகை வித்யா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் நடிகை வித்யா அவர்கள் பேட்டியில், எந்த ஒரு சூழ்நிலையிலும் தாலியை கழட்டி வைத்து விட்டு நடிக்க மாட்டேன்.

தாலி குறித்து வித்யா சொன்னது:

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் அந்த ப்ராஜெக்ட் வேண்டாம் என்று கூறி விடுவேன். எனக்கு சென்டிமென்ட்
இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் என்னுடைய கணவர் கட்டியது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இதுதான் எனக்கு அவர் போட்ட முதல் செயின் என்று கேரளா தாலியை வித்யா பேட்டியில் காண்பித்து இருக்கிறார். இப்படி பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பலரும் வித்யாவை பாராட்டி வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full