நடிகை அதிதி மேனனின் கள்ளக்காதலர்கள் லிஸ்ட்.! ஜீ வி பிரகாசையும் லிஸ்டில் சேர்க்கும் கணவர்.!

By Rajkumar · 21/2/2019

தமிழில் `பட்டதாரி' படத்தின் மூலம் ஹீரோயினாகஅறிமுகமான அதிதி மேனன் கடந்த 18ம் தேதி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன், தனக்கு அபி சரவணன் தரப்பிடமிருந்து மிரட்டல் வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், 'பட்டதாரி' படத்தில் அவருடன் நடித்த போது நட்பாகி பிறகு அதுக் காதலாக மாறியது. அதன் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவை யாவும் உண்மையில்லை. என்னைத் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்தார்.

ஆனால், அபி சரவணனோ ,நானும் அவரும் கடந்த 3 வருடங்களாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகிறோம். என்று கூறியுள்ளார். மேலும், அவருக்கு சமீபத்தில் ஆண் நண்பர்களின் தொடர்பு அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் மூலம் தவறான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு வருகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும், அதிதி மேனன் சினிமா வாய்ப்புகள் பெறுவதற்கு அலைவதாகவும் தெரிவித்த சரவணன், லேட்டஸ்டாக அதிதியின் நண்பர்கள் பட்டியலில் சேர்ந்த ஒருவர் அதிதியை பிரபல நடிகர் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க வைப்பதாகச் சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதிதி மேனன், ஜி வி பிரகாஷுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full