அபிஷனின் காதல் படமான 'வித் லவ்' வசூலில் வாரிசுருட்டியதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இது தான்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வித் லவ். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை மதன் என்பவர் இயக்கி இருக்கிறார். அபிஷன் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தது. அதேபோல் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம் நன்றாக வந்திருக்கிறது. முதல் படத்திலேயே அபிஷன் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இயக்குனராக ஹிட் கொடுத்து நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் வரிசையில் அபிஷனும் இடம்பிடிப்பார். இந்த படம் எல்லோர் வயதினரும் சென்று பார்க்கும் ஒரு ஜாலியான படமாக இருக்கிறது.
வித் லவ் படம்:
மொத்தத்தில் இந்த ஆண்டின் ஒரு பீல் குட் படமாக வித் லவ் இருக்கிறது. இந்த நிலையில் வித் லவ் படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல் நாளே இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை செய்திருக்கிறது. இந்த படம் உலக அளவில் ஒரே நாளில் 1.75 கோடி வசூலித்திருந்தது.
படத்தின் வசூல்:
இந்தியாவில் மட்டும் இந்த படம் 1.5 கோடி வசூலித்து இருக்கிறது. அறிமுக நடிகருடைய படத்திற்கு இவ்வளவு பெரிய வசூல் கிடைத்தது பெரிய விஷயம்தான். அதோடு இந்த படம் வெளியான போது எந்த படமும் திரையரங்கிற்கு வராததால் நல்ல வசூல் செய்து வருகிறது. இனிவரும் நாட்களிலும் பாக்ஸ் ஆபிஸில் சிங்கம் போல வித் லவ் படம் வசூல் வேட்டை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் கதை:
படத்தில் ஹீரோ அபிஷன் தன்னுடைய அம்மாவை இழந்து மனவேதனையில் தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். அவருடைய வாழ்க்கை சரியாக அமைய வேண்டும் என்று அவருடைய அக்கா ஆர் ஜே ஆனந்தி திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். பின் மேட்ரிமோனி வழியாக ஹீரோ, ஹீரோயின் அனஸ்வராவை சந்திக்கிறார். கொஞ்ச நேரத்திலேயே இருவரும் பள்ளி கால நண்பர்கள் என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். அதற்குப் பிறகு கதை பள்ளி நாட்களுக்கு செல்கிறது. இருவரும் தங்களுடைய பழைய காதலர்களை பார்த்தால் என்னவாக இருக்கும்? என்று அவர்களை நோக்கி செல்கிறார்கள். அப்போது நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தினுடைய மீதி கதை.