வித் லவ் படத்துல நான் ஹீரோவாக நடிக்க அவர் தான் காரணம் - நடிகர் அபிஷன் ஜீவிந்த் ஓபன் டாக்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வித் லவ். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மதன் என்பவர் இயக்கி இருக்கிறார்.
இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் அபிஷன், டூரிஸ்ட் பேமிலி படத்தின் போது மதன் எனக்கு ஒரு கோ டைரக்டராக வந்தார். ப்ரொடக்ஷன் சைடில் இருந்து தான் அவரை அனுப்பி வைத்திருந்தார்கள். கொஞ்சம் பார்த்து தான் இருக்கணும்னு நினைத்தேன். ஆனால், டூரிஸ்ட் பேமிலி படம் முடியும் சமயத்தில் என்னோட
நெருக்கமான நண்பர்கள் பட்டியலில் மதனும் சேர்ந்து விட்டார். என்னுடைய மனைவி கூட, நீ இப்பல்லாம் என்னை விட மதன் கிட்ட தான் அதிகம் போன் பேசுற என்றெல்லாம் சொல்லுவார்.
வித் லவ் படம்:
மதன், வித் லவ் படத்தோட ஸ்கிரிப்ட்டை இரண்டு வாரத்தில் எழுதி முடித்து விட்டார். இது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவர் ரொம்ப நல்லா நடிப்பார் என்று எனக்கு அவரோட நரேஷனில் தான் தெரிந்தது. முதலில் நான் இந்த படத்தில ஹீரோவாக நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன். அதற்கு பிறகு தான் என் கூட இருந்த எல்லோரும் என்னை மோட்டிவேட் பண்ணினார்கள். அதற்கு பிறகு தான் சரி நடிக்கலாம் என்று முடிவெடுத்தேன். ஹீரோவாக வித் லவ் என்னோட முதல் படமாக இருக்கிறது. இது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=oF4YkACX4Ro
அபிஷன் பேட்டி:
இந்த வாய்ப்பு கொடுத்த மதனுக்கு நான் முதலில் நன்றி சொல்கிறேன். மதன் இந்த படத்திற்கு அனஸ்வரா தான் கதாநாயகியாக இருக்கணும் என்று ரொம்ப பிடிவாதமாக சொன்னார். ட்ரைலரில் நாங்கள் எதையுமே சஸ்பென்ஸாக வைக்கவில்லை. முழு கதையை ரிவில் பண்ணிவிட்டோம். படத்தை பார்க்க வர எல்லோருமே படத்தை என்ஜாய் பண்ணுவது தான் எங்களுடைய நோக்கம். படம் பார்த்துவிட்டு ரஜினி சார் என்ன சொல்வாருன்னு நாங்க ரொம்பவே எதிர்பார்த்து இருந்தோம்.
ஹீரோவாக நடிக்க காரணம்:
ரஜினி சாருக்கு படம் ரொம்பவே பிடித்திருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் நடந்ததுக்கும் நான் ஹீரோ ஆனதுக்கும் முக்கிய காரணமே ரஜினி சார் தான். இந்த படம் பண்ணுவதில் நான் டவுட்டில தான் இருந்தேன். ஆனால் அவரை மீட் பண்ண பிறகு தான் ஒத்து கொண்டேன். அவர் தான் படம் நல்லா இருக்கும் பண்ணுங்க என்று என்னை மோட்டிவேட் பண்ணார் என்று கூறியிருக்கிறார்.