லியோ படத்தின் இரண்டாம் பாதி சுமாரா? தீயாய் பரவும் தகவல். ஏமாற்றத்தில் ரசிகர்கள்.

By Dhilip Kumar · 26/9/2023

லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சுமாராக இருக்கிறது என்ற வதந்தி இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து லியோ திரைப்படம் குழு தெரிவித்த விஷயம். சோசியல் மீடியா முழுவதும் தற்போது லியோ படம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்று நடிகர் அர்ஜுனன் பிறந்தநாள்.

இதனால் லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருக்கிறது. அதில் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிற ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். தற்போது படம் வெளியாக சிறிது நாட்களே உள்ள நிலையில் தினமும் ஒவ்வொரு அப்டேட்டுகளை லியோ படக்குழு கூறி இருக்கிறது. அதன் படி அப்டேட்டுகளும் வந்த வண்ணமே இருந்தன. இந்த நிலையில் தான் கேரளாவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

படம் குறித்த செய்தி:

தற்போது லியோ படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் போஸ்டர் படக்குழு வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் வெளியிடும் ஒரு ரெட் ஜெயன்ட் நிறுவனம் தனக்கு தான் அளிக்க வேண்டும் என்று மிரட்டப்படுவதாக தகவல்களையும் படக்குழு முழுவதும் மறுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது. அதில் லியோ படத்தின் இரண்டாம் பாதி சுமாராக இருக்கிறது என்றும் வதந்திகள் பரவி வருகிறது.

தற்போது தான் படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதன்பின் அனிருத் பின்னணி இசை இன்னும் தொடங்கவில்லை என்றும் இந்த நிலையில் லியோ படத்தை யார் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை என்ற கேள்விகளும் எழுப்பி உள்ளது. அதன் பின்பு தான் இதுவும் ஒரு வதந்தி எனக்கு தெரிய வருகிறது. தற்போது விஜயின் கோட்டையாக இருக்கும் கேரளாவில் விஜய் படத்திற்கு எதிராக ஹேஷ்டகுகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அளவிற்கு கேரளாவிலும் ரசிகர் பலம் உள்ளது எந்த நிலையில் தான் கேரளா மக்கள் விஜய்யின் வீடியோ படத்தை புறக்கணிக்க போவதாக பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full