கட்டுபாட்டை இழந்து கூட்டத்தை நோக்கி பாய்ந்த லாரி - விஷால் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தின் பதைபதைக்கும் வீடியோ காட்சி.

By Manikandan · 22/2/2023

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே. ஆனால், இவர் அதற்கு முன்னரே 1989ல் நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளி வந்த ‘ஜாடிக்கேத்த மூடி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் செல்லமே என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். சமீபத்தில் வெளியான லத்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மார்க் ஆண்டனி :

தற்போது நடிகர் விஷால் தன்னுடைய 33வது படமான "மார்க் ஆண்டனி என்ற படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார், எஸ் ஜே சூரிய இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் அபிநயா, ரோட்டு வர்மா என போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த "மார்க் ஆண்டனி" திரைப்படத்தில் பிரபல நடிகர் சுனில், மலேஷிய நடிகர் டி.எஸ்.ஜி மற்றும் இயக்குனர் இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவன் நடித்து வருவதாக தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாக்கி வரும் இடப்பதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஷால் இரண்டு வேடத்தில் நடிக்கின்றனர் என்றும் முன்னரே ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியான போது கூறப்பட்டது.

படப்பிடிப்பு தளத்தில் விபத்து :

இதனை தொடர்ந்து தற்போது தான் "மார்க் ஆண்டனி" படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என கூறப்படும் ஒரு பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் "லாரி ஓன்று ஆக்ஷன் சொன்னதும் வருகிறது. ஆனால் அந்த வாகனம் கட்டுப்பாட்டை மீறி வேகமாக வந்து செட்டில் மோதுகிறது. அந்த மோதலின் போது அங்கு பல சினிமா தொழிலாளர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் இருந்தனர்.

லாரி நிற்காமல் வருவதை பார்த்த அங்குள்ள தொழிலாளர்கள் இரு புறம் சிதறி ஓடினர். பின்னர் லாரில் செட்டில் வேகமாக வந்து மோதியது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக அடிபடவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து சில தொழிநுட்ப கோளாறு காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full