விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை.

By Rajkumar · 20/10/2020

விஜய் சேதுபதி மகள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பேசிய நபர் மீது சென்னை காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் விஜய் சேதுபதி, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருந்தார். 800 என்று தலைப்பை கொண்ட அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதராவானவர் எனக்கூறி பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

https://twitter.com/Chinmayi/status/1318234526229827584

அதே போல பாரதி ராஜா, அகத்தியன், சேரன், சீனு ராமசாமி என்று பல்வேறு இயக்குனர் கூட விஜய் சேதுபதியை இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். முத்தையா முரளிதரன் கூட விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கைக்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, ``நன்றி.. வணக்கம்” எனக் கூறி இருந்தார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு 'அந்த படம் அவ்வளவு தான் முடிந்துவிட்டது' என்று கூறி இருந்தார் விஜய் சேதுபதி.

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக என்னை சமூக வலைதளத்தில் ஒரு மர்ம நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சின்மயி பதிவிட்டுள்ளதாவது ''கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு support a நிக்கிறாங்க இந்த ஊர்ல. இந்த சிஸ்டமில் இருக்கும் யாராவது இதை மாற்றிவீர்களா ? பொது இடத்தில் ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என்று ஒரு நபர் செல்வது குற்றம் என்று கூறியுள்ளார்.

https://twitter.com/copmahesh1994/status/1318520741395005440

அதே போல பல்வேறு திரை துறை பிரபலங்களும் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்து வந்தனர். இப்படி ஓரு நிலையில்  அந்த நபர் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்திருப்பதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full