கடவுள் சக்தி இருக்கு, பேய் அமானுஷ்யம் இருக்கா? பட விழாவில் நடிகர் ஆதி சொன்ன தகவல்
சப்தம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆதி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தமிழில் ஈரம், மரகதநாணயம், யாகவராயினும் நாகாக்க போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இருந்தாலும், சமீப காலமாக இவர் அதிகம் தமிழில் நடிப்பது இல்லை. அதோடு இவர் தெலுங்கு மொழியில் தான் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பாட்னர். இந்த படத்தை இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, யோகிபாபு, பாண்டியராஜன், ரவி மரியா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
ஆதி குறித்த தகவல்:
தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்திருக்கும் படம் சப்தம். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியாகிய ஈரம் படம் மூலம் தான் அறிவழகன் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாக இருந்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து சப்தம் படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தில் ஆதி, பேய்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் புலனாய்வாளராக நடித்திருக்கிறார்.
சப்தம் படம்:
இந்த படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமிமேனன், ரெடிங் கிங்ஸ்லி, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஈரம் படத்தை போலவே இந்த படமும் சஸ்பென்ஸ் திகில் பாணியில் உருவாகி இருக்கிறது. இன்று இந்த படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகர் ஆதி, தெலுங்கில் தான் நான் அதிகமாக நடித்துக் கொண்டிருந்தேன். தமிழ்,தெலுங்கு என்றெல்லாம் நான் பார்க்கவில்லை.
ஆதி பேட்டி:
நல்ல படம் எங்கு கிடைத்தாலுமே நடிப்பேன். தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருக்கிறேன். தமிழில் என்னை இனி அடிக்கடி பார்க்கலாம். சப்தம் படம் இந்திய அமானுஷ்ய புலனாய்வாளர் பற்றிய கதை. இதற்காக நான் கௌரவ் திவாரி என்பவருடைய வாழ்க்கை, வீடியோக்களை நிறைய பார்த்து கற்றுக் கொண்டேன். இது ஒரு ஹாரர் படம். எங்களுக்கும் அமானுஷ்யங்கள் குறித்த பயம் இருக்கு. ஷூட்டிங் போது எல்லோருக்கும் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. போகப்போக பழகி விட்டது.
https://www.youtube.com/watch?v=HcQKHCwQXG4
சப்தம் படம் பற்றி சொன்னது:
ஈரம் படம் பார்க்கும்போது எனக்கு பயம் தெரியவில்லை. ஆனால், அமானுஷ்ய புலனாய்வளாராக இந்த படத்தில் நடித்திருப்பதால் பேய் பற்றி பயம் வந்தது. கடவுள் சக்தி இருப்பது போல பேய் அமானுஷ்யம் இருப்பதாக கொஞ்சம் நம்பிக்கை இந்த படத்தின் மூலம் எனக்கு வந்திருக்கிறது. மேலும், எனக்கு படத்தில் வில்லனாக நடிக்கவும் ஆசை இருக்கிறது. நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். யார் கூட வேண்டும் என்றாலும் வில்லனாக நடிப்பேன். கதை தான் முக்கியம். அஜித் , விஜய் உடன் வில்லனாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.