இந்த ஒரு விஷயத்தை எப்போதும் அஜித் சார் சொல்லிட்டே இருப்பார்- 'விடாமுயற்சி' ஆரவ் பகிர்ந்த தகவல்
அஜித் குறித்து விடாமுயற்சி படத்தின் ரிலீஸ்க்கு பிறகு நடிகர் ஆரவ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது.
விடாமுயற்சி படம்:
இன்று அனைவரும் எதிர்பார்த்த அஜித்தின் விடாமுயற்சி படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விடாமுயற்சி படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் திரையரங்கில் விடாமுயற்சி படத்தை பார்க்க வந்த நடிகர் ஆரவ் அளித்த பேட்டியில், விடாமுயற்சி படம் இன்று வெளியாகியிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
ஆரவ் பேட்டி:
மக்கள் மீதும் ரசிகர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது என்று எப்போதுமே அஜித் சார் சொல்லிக்கொண்டே இருப்பார். இந்த மாதிரியான ஒரு படம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என்றும் சொன்னார். அஜித் சாரின் ஒரு ரசிகனாக, நான் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருந்தது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இந்த படத்தில் அனைவரின் கடின உழைப்பையும் மக்கள் பார்ப்பார்கள். அஜித் சார் எப்போதும் ரசிகர்கள் பற்றி தான் பேசுவார்.
https://www.youtube.com/watch?v=4j05mzH2PQI
அஜித் குறித்து சொன்னது:
அவர் ரசிகர்கள் மீது அக்கறை கொள்வார். அதனால் தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு மெசேஜை கொடுத்துக் கொண்டே இருப்பார். நேற்று கூட சாரிடம் நான் பேசினேன். அப்போது அவர் எனக்கு வாழ்த்தை தெரிவித்து இருந்தார் என்று கூறியிருக்கிறார். அர்ஜுன் (அஜித்) , கயல் (திரிஷா) ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கும் கணவர் மனைவியாக இருந்து வருகின்றனர். இருவரும் ஒரு நாள் ஒரு நீண்ட பயணம் செல்லும் போது இவர்களின் கார் பாலைவனத்திற்கு நடுவே நின்று விடுகிறது.
படத்தின் கதை:
அப்போது ட்ரக்கில் ரக்ஷித் (அர்ஜுன்)வருகிறார். அவர் இருவருக்கும் உதவி செய்ய முன் வருகிறார். இதனால் திரிஷாவை அவரது வாகனத்தில் அஜித் ஏற்றி அனுப்பிவிடுகிறார். தனது மனைவியை அழைத்து சென்ற பின்னர் அவர் அவரின் ட்ராக்கில் திரிஷாவை ரக்ஷித் (அர்ஜுன்) மீண்டும் வந்து தன்னையும் அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் திரும்பி வராததால் தனது மனைவியை தேடி செல்கிறார் அர்ஜுன் (அஜித்). அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.