சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்கிட்ட பணம் இல்லை - நடிகர் ஆரியின் ஆதங்கம் - நடந்தது என்ன?

By subhashini · 2/3/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஃபோர்த் ஃப்ளோர்(fourth floor). இந்த படத்தை இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ராஜா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் தலைவாசல் விஜய், சுப்பிரமணிய சிவா, பவித்ரா, தீப்ஷிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு தரன் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில்
நடிகர் ஆரி, போர்த் ஃப்ளோர் படம் பிப்ரவரி 27ஆம் தேதி தான் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு மால்களில்
தியேட்டர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். சண்டை போட்டு தியேட்டர் கேட்டுக் கொண்டிருக்கிறோம். காரணம் கேட்டால், நீங்கள் செய்த விளம்பரம் பத்தாது என்று சொல்கிறார்கள்.

ஃபோர்த் ஃப்ளோர் :

தாய் கிழவி படம் பாருங்கள் எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள். அதனால் தியேட்டர்கள் கொடுக்கிறோம் என்றார்கள். தாய்க்கிழவி படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் விளம்பரம் செய்யும் அளவுக்கு பொருளாதார வலிமையும், சக்தியும் இருக்கிறது. ஆனால், என்னுடைய படத்தின் தயாரிப்பாளர் திருப்பூரில் சொந்த தொழில் செய்து சம்பாதித்த பணத்தில் அவரால் முடிந்த அளவுக்கு செலவு செய்து படத்தை தயாரித்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=jFGArRTD1M4

ஆரி பேட்டி:

எந்த அடிப்படையில் தியேட்டர்கள் வழங்குகிறார்கள் என்று புரியவில்லை. எந்த படம் ஓட வேண்டும் ஓடக்கூடாது என்பதை தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல, இப்போது மால்களும் தீர்மானிக்க தொடங்கி விட்டார்கள். அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். புது முகங்களுக்கும் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கும் உரிமையை கொடுப்பதில்லை.

சினிமா நிலைமை:

அவர்களெல்லாம் எப்படி முன்னேறுவார்கள்? தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானமாக இருக்கிறது. நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்கங்கள் கொடுப்பதில்லை. அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே விளம்பரம் கொடுக்கப்படுகிறது. மற்ற படங்களை புறக்கணிக்கிறார்கள். படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full