வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை கிழித்து எடுத்த நடிகர் ஆரி - வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ

By subhashini · 13/3/2022

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். அதோடு இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி நடித்தும் இருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. பின் மீண்டும் இவர் தனது விமர்சன பணியை செய்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து இருக்கிறார். நேர்கொண்ட படத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. மேலும், அஜித் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

வலிமை படம் பற்றிய தகவல்:

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும், இந்த படம் வெளியானதை பாண்டா பிரஷாந்த், சினிமா பையன் அபிஷேக் என்று பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை குறித்து விமர்சனம் செய்தது பயங்கர சர்ச்சையானது. அதில் அவர், படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல், அஜித்திற்கு மூஞ்சில் தொப்பை இருக்கு. படம் தயாரித்த போனி கபூர் தான் ஒரு சேட் என்றால் அஜித் பஜன் லால் சேட்டு மாதிரி கொழுக் முழுக்னு இருக்கார். டான்ஸ் ஆடவே கஷ்டப்படுறார் என்று அஜித்தை உருவ கேலி செய்துள்ளார்.

வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்:

இப்படி ப்ளூ சட்டை மாறன் அஜித்தை உருவ கேலி செய்து இருக்கும் விஷயம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையானது. இதனால் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ப்ளூ சட்டை மாறன் மீது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் குறித்து நடிகர் ஆரி பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் பாதி கூறியிருப்பது, ஒரு படம் நல்லா இருக்கும், நல்லா இல்லை என்பதை சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், தரம் தாழ்ந்து வார்த்தைகளை விடுவதும், தனிப்பட்ட முறையில் தாக்கும் மிக மிக கண்டனத்துக்குரியது. அதைப் படம் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அதை வைத்து வியாபாரம் செய்யும் நபர்களும் செய்வது தவறான ஒன்று.

ப்ளூ சட்டை மாறன் குறித்து ஆரி சொன்னது:

எங்களுடைய படத்தைப் பார்த்து அதை வியாபாரம் செய்து தயாரிப்பாளர்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. உங்களுடைய பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்கள். அந்த மாதிரி வலிமை படத்தை பார்த்துவிட்டு ஒரு ஹீரோ நடனமாடுவது நன்றாக இருக்கா? இல்லையா? இப்படி செய்யலாம்? இப்படி செய்ய வேண்டாம்? என்று கருத்து சொல்லலாம். ஆனால், அது பரோட்டாவிற்கு மாவு பிசைவது போல் இருக்கிறது என்று உருவ கேலி செய்வது ரொம்ப மிக மிக தவறான வார்த்தை. இதே சினிமாவிலிருந்து படத்தை தயாரித்து இயக்கிய நீங்கள் போராடுவது போல் தான் பல தயாரிப்பாளர்களும் ஒவ்வொரு படத்திற்காக போராடுகிறார்கள்.

https://youtu.be/48bs5TLoXt4

விமர்சனம் செய்யும் முறை பற்றி ஆரி சொன்னது:

150 ரூபா பணம் கொடுத்து பார்த்துவிட்டு கருத்தை உங்களுடைய சோசியல் மீடியாவில் போட்டுக் கொள்வதில் தவறில்லை. அதை வியாபாரம் பண்ணுகிறீர்கள். இந்த படம் நன்றாக இல்லை, போக வேண்டாம் என்று சொல்வது தவறு. படத்தை திருத்திக்கொள்ளும் கருத்துக்கள்சொல்லலாமே தவிர அந்தப் படத்தை காலி பண்ணு மாதிரி கமெண்ட் சொல்வது ரொம்ப தவறான ஒன்று. ஒரு படம் வெளிவருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை தெரிந்தும் இந்த மாதிரி செய்வது மல்லாக்க படுத்து எச்சில் துப்புவது நம் மேல் தான் விழும். அந்த மாதிரி இருக்கிறது. தயவுசெய்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் செய்வதை நிறுத்துங்கள் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full