நடிகர் அப்பாஸின் அழகான மனைவி மற்றும் குழந்தைகள் - தற்போதைய நிலை

By Ashok · 2/3/2018
நடிகர் அப்பாஸ் 1975ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் மிர்ஸா அப்பாஸ் அலி. இவருடைய குடும்பம் பாலிவுட் நடிகர் பேரொஸ் கானுக்கு சொந்த முறையாகும். சிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார் அப்பாஸ். தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார் அப்பாஸ். அப்போது தமிழ் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார். அப்போது அவரது நண்பர்கள் மூலம் அறிமுகம் ஆனவர்தான் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் அப்பாஸ். தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ், அதன் பின்னர் மிகப்பெரிய நடிகராக பார்க்கப்பட்டார். விஜய் மற்றும் அஜித்துக்கு போட்டியாக இவர் வருவார் என பலர் கனவு கண்டார்கள். அதன்பின்னர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்தார் அப்பாஸ். தமிழில், படையப்பா சுயம்வரம் மலபார் போலீஸ் ஹே ராம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மின்னலே காதல் வைரஸ் அடிதடி ஆனந்தம் என பல ஹிட் படங்களில் நடித்தார்.இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது.தற்போது அப்பாஸ் டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
behindtalkies AMP · Quick view
View full