பல வருடங்களுக்கு பின் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சாக்லேட் பாய் அப்பாஸ் - படம் குறித்த அப்டேட்

By subhashini · 5/2/2025

பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் மீண்டும் நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் பல நடிகர்கள் இருந்தார்கள். பிரசாந்த் துவங்கி மாதவன் வரை பல்வேறு நடிகர்கள் சாக்லேட் பாய் என்ற பட்டத்துடன் கொடிகட்டி பறந்தவர்கள். அந்த வகையில் நடிகர் அப்பாஸும் ஒருவர்.

தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் 1996 ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. மேலும், இவர் சிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார்.

அப்பாஸ் திரைப்பயணம்:

பின் இவர் தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார். அப்போது தான் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார். அப்படி தான் இவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது. முதல் படத்தின் வெற்றி தொடர்ந்து, விஜய் மற்றும் அஜித்துக்கு போட்டியாக இவர் வருவார் என பலர் கனவு கண்டார்கள். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார்.

அப்பாஸ் குறித்த தகவல்:

இதனிடையே இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். அதன் பின்னரும் அப்பாஸ் சினிமா, டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். இறுதியாக இவர் 2011 ஆம் ஆண்டு ‘கோ’ படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றி இருந்தார். அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை.

சினிமாவை விட்டு விலகிய அப்பாஸ்:

ஒரு கட்டத்தில் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் சினிமாவே வேண்டாம் என்று வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இவர் வெளிநாட்டில் ஆரம்ப காலத்தில் அப்பாஸ் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற ஹோட்டல், பெட்ரோல் பங்க், வண்டிக்கு பஞ்சர் ஒட்டுவது போன்ற பல வேலைகள் செய்திருந்தார். இதை சமீபத்தில் அளித்த பேட்டியில் அப்பாஸ் சொல்லியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் நடிகர் அப்பாஸ் நடிக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் நடிக்கும் அப்பாஸ்:

அதாவது, 10 வருடங்களுக்கு பிறகு நடிகர் அப்பாஸ் மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் வெப் தொடர் ஒன்றில் தான் நடிக்க இருக்கிறார். இவர் எக்ஸாம் என்ற தொடரில் தான் நடிக்க இருக்கிறார். இதை புஷ்கர் காயத்ரி தயாரிக்கிறார். இதை இயக்குனர் சற்குணம் தான் இயக்குகிறார். இவருடன் துஷாரா விஜயன், அதிதிபாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த வெப் தொடர்பு குறித்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full