உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர் நிலை, உதவி கேட்டு அவரே வெளியிட்ட வீடியோ
துள்ளுவதோ இளமை பட நடிகர் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் தான் துள்ளுவதோ இளமை.
இந்த படத்தில் தனுஷ், ஷெரின் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பெரும்பாலும் இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் தான் நடித்து இருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தவர் தான் அபிநய். இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் உட்பட சில மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
அபிநய் திரைப்பயணம்:
ஜங்சன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் எல்லாம் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். ஆனால், அந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வெற்றி அடையவில்லை. அதற்கு பிறகு இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச்சோலை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருந்தார்.
அபிநய் குறித்த தகவல்:
அது மட்டும் இல்லாமல் நடிகர் வித்யூக் ஜாம் வால்யூவுக்கு இவர் தான் டப்பிங் பேசி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்திருந்தார். இவர் படங்கள், விளம்பரங்கள் என்று நடித்திருந்தார். ஆனால், சில வருடங்களாகவே இவர் சினிமா பக்கமே காணோம். இவர் என்ன ஆனார்? என்றுமே தெரியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் சோசியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு தான் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
அபிநய் தற்போதைய நிலை:
அதற்கு காரணம், நடிகர் அபிநய், லிவர் சிரோசிஸ் என்ற கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய வயிற்றுப் பகுதியில் அளவுக்கு அதிகமாக வீங்கிருப்பதால் அவருக்கு டியூப் மூலமாக சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்களையுமே அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.
மார்ச் 6 #துள்ளுவதோஇளமை #ஜங்ஷன் போன்ற படங்களில் நடித்திருக்கும் அபிநய், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 5, 2025
அபிநய் எண் - 90031 82483 pic.twitter.com/W90Cdck0rl
அபிநய் கேட்கும் உதவி:
அது மட்டும் இல்லாமல் இதுவரை 15 லட்சம் செலவான நிலையில் இவருக்கு சிகிச்சைக்காக 28 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அதனால் பணம் உதவி செய்ய கேட்டு அபிநய் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். ஹேண்ட்சம் பாயாக இருந்த அபிநய் தற்போது அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் மெலிந்து காணப்படுகிறார். இவருடைய நிலைமை தான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடன் நடித்த தனுஷ் உதவி செய்வாரா? சினிமா துறையில் இருந்து இவருக்கு உதவி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.