பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட `அதர்ஸ்' பட நடிகர் ஆதித்யா மாதவன் - நடந்தது என்ன?

By subhashini · 8/11/2025

தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே கௌரி கிஷன் விவகாரம் தான். தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் கௌரி கிஷன்.
96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் தமிழில் உருவாகி இருக்கும் படம் அதர்ஸ். இந்த படத்தில் புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தை அபின் ஹரிஹரன் இயக்கியிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கான ப்ரோமோஷனின் போது செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் செய்தியாளர் ஹீரோவிடம், கௌரி கிஷனை தூக்கிறீர்களே, அவருடைய வெயிட் எவ்வளவு இருந்தது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதை கேட்டு கோபப்பட்ட கௌரி கிஷன், என்னுடைய உடல் எடையை தெரிந்து வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஒருவரை உடல் ரீதியாக அவமானப்படுத்துவதெல்லாம் கேள்வியா? நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன்.

கௌரி கிஷன் விவகாரம்:

அதை குறித்து கேளுங்கள். இங்க நான் மட்டுமே தான் பெண். இப்படி பாடி ஷேமிங் செய்வது, அவமானப்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு நடிகையினுடைய உடல் எடையை தெரிந்து கொள்வது அநாகரிகமானது. இதெல்லாம் ஒரு கேள்வியா? என்னைப் பற்றி stupid தனமாக கேட்ட கேள்விக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கேட்டிருந்தார். இதனால் பத்திரிகையாளருக்கும் கௌரி கிஷனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது தொடர்ந்து பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=nV7PG5oaF7M

ஆதித்யா மாதவன் பேட்டி:

இதை அடுத்து பிரபலங்கள் பலருமே கௌரி கிஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், பிரச்சனையின் போது அதர்ஸ் பட ஹீரோ எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தது தவறு என்று விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் அதர்ஸ் படத்தின் நாயகன் ஆதித்யா மாதவன், ஒரு தனி நபருடைய தவறான கேள்வியை கேட்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.
என்ன தான் நான் அமைதியாக இருந்தாலும் என்னுடைய ஆதரவு எப்போதும் கௌரி கிஷனுக்கு தான். நான் இந்த ஊடகங்கள் மூலம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஏற்கனவே கௌரியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன். ஆனால், அந்த நேரத்தில் நான் அமைதியாக இருந்திருக்கக்கூடாது.

https://www.youtube.com/watch?v=nLo7orqjlDk

பகிரங்க மன்னிப்பு:

அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அந்த விவாதத்தின் போது அவர்களுக்கு மத்தியில் குறிப்பிட்டு பேச வேண்டாம் என்றும் , கௌரியின் கருத்தை அவர் தெளிவாக கூற இடம் அளிக்க வேண்டும் என்றும் தான் நான் அமைதியாக இருந்தேன். எனக்கு பேசுவதற்கு எந்த பயமும் கிடையாது. நான் எப்போதும் கௌரி உடன் உறுதியாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய முதல் படம் என்பதால் மீடியாவை சந்திக்கும் போது, கேள்விகளை எதிர்கொள்ளும் போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது. நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் லட்சக்கணக்கான மக்களிடம் சென்று சேர்க்கிறது என்பதால் நான் என்ன பேசுகிறேன் என்பதில் கவனமாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full