அஜித் வாழ்க, விஜய் வாழ்கன்னு சொல்லிட்டே இருந்தா நீங்க எப்போ வாழ போறீங்க- ரசிகர்களுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்

By ·

ரசிகர்களுக்கு அஜித் சொல்லி இருக்கும் அட்வைஸ் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிங் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்குமே தெரியும்.

இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் '24H' கார்பந்தயம் துபாயில் நடந்தது. இதில் அஜித் குமாருடைய டீமுமே களம் இறங்கி இருக்கிறது.

அஜித்குமார் ரேசிங் டீம்:

கடந்த ஆண்டு 'அஜித்குமார் ரேசிங் டீம்' என்ற குழுவை அஜித் உருவாக்கி ரேஸிங்க்கு தேவையான அனைத்தையுமே செய்து வந்திருந்தார். தற்போது அந்த குழு உடனே கார் பந்தயத்திலும் அஜித் களம் இறங்கி இருந்தார். இடையில் அஜித் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின் மீண்டும் கலந்து கொண்டார். அதோடு இவர் தன் ரசிகர்களுக்காக பேட்டியும் கொடுத்து இருந்தார். மேலும், நடந்து முடிந்த இந்த 991 பிரிவில் கார் ரேஸில் அஜித் குமார் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

பிரபலங்கள் வாழ்த்து:

இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அஜித் மேடையிலேயே பரிசு வாங்கும் போது அவருக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து வாழ்த்து செய்துள்ளார்கள். பின் தன்னுடைய மகனை மேடையில் ஏற்றிய அஜித், அவருடைய ஒரு கையில் கோப்பையும் இன்னொரு கையில் இந்திய தேசிய கொடியும் கொடுத்து காண்பித்து இருந்தார்
அதற்க்குப்பின் தன்னுடைய அணியினர் மற்றும் தன்னுடன் இருந்தவர்களுக்கு அஜித் நன்றி சொல்லி பேசி இருக்கிறார்.

அஜித் பேட்டி:

மேலும், கார் ரேஸுக்கு பிறகு அஜித் கொடுத்த பேட்டியில், ரசிகர்கள் அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்றெல்லாம் சொல்கிறார்கள். நீங்க எப்ப வாழ போறீங்க? நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஆனால், தயவுசெய்து உங்களுடைய வாழ்க்கையை பாருங்கள். என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் சிறப்பாக சாதிக்கிறார்கள் என்று தெரிந்தாலே நான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன். மற்ற நடிகர்கள், என்னுடைய சக நடிகர்கள் போன்றவர்களிடமும் என்னுடைய ரசிகர்கள் அன்பாக பேசினால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். என்னுடைய ரசிகர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் அதுதான் என்னுடைய விருப்பம் என்று பேசி இருக்கிறார்.

அஜித் திரைப்பயணம்:

கடைசியாக அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளிவந்த துணிவு படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ஆரவ், உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்தது. தற்போது இந்த படத்தினுடைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full